இன்று விக்ரமன் மற்றும் ஜனனிக்கு இடையே நடந்த பிரச்னை பற்றிய வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.


டாஸ்க்கின் விதிமுறைகள் :


ஒவ்வொருவராக பிக்பாஸ் கேமரா முன் சென்று, அவர்களின் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும்.


முதல் ப்ரோமோ : 






உங்கள் தமிழில் பிரச்சனை போல என்று விக்ரமன் அவர்கள் ஜனனியை சுட்டிகாட்டியது மனவேதனையை அளிக்கிறது என வழக்கு குறித்து அசிம் வாதிட துவங்குகிறார். அப்போது விக்ரமன் தரப்பில் வாதாடும் குயின்ஸி,  “உங்கள் மொழியில் சிரமம் உள்ளதா என்றே சொன்னார்” என குறிப்பிட்டார்.


பின், விக்ரமன் “ அவங்க தமிழ்ல பேசுவரது எனக்கு பிரச்னை கிடையாது. தெந்தமிழ் பேசுவது எனக்குமே தடுமாற்றம்தான்” 
என அவரது தரப்பு நியாயத்தை பேசினார். அதற்கு அடுத்து ஜனனி, விக்ரமன் பேசியது அவருக்கு வருத்தத்தை கொடுத்தது என சொன்னார்.இதனை தொடர்ந்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் மாற்றி மாற்றி பேசினர். இந்த வழக்குக்கு மணிகண்டா ராஜேஷ் நீதிபதியாக அமர்தப்பட்டுள்ளார்.


இரண்டாவது ப்ரோமோ : 






இந்த வாதங்கள் நிறைவடைந்து அனைவரும் பிக்பாஸ் வீட்டில் சென்று தனது வேலைகளை பார்த்து வந்தனர். அப்போது விக்ரமனை,  ஜனனி அழைத்து பேசினார். முதலில், விக்ரமனை  சமாதனம் செய்யும் பாணியில் பேசினார் ஜனனி. இறுதியில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இந்த வாரத்தில், இன்றும் நாளையும் இந்த டாஸ்க் நடக்கவுள்ளது. பின்பு, சனி ஞாயிறு பஞ்சாயத்தில் கமல், இந்த மொழி பிரச்னையை எப்படி கையாளப் போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இறுதி ப்ரோமோ : 






அனைவரும் தனிநபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, கதிரவன் மட்டும் காஃபி குடிக்கும் கப், சாப்பிடும் தட்டு சுத்தம் செய்யாமல் இருக்கிறது என்ற பொது வழக்கு ஒன்றை தொடுக்கிறார்.


அந்த வழக்கில் அனைத்து போட்டியாளர்களும் ஆஜர்படுத்த படுகின்றனர்.  அப்போது பாத்திரம் கழுவும் அணியை சேர்ந்த தனலட்சுமி  “இதெல்லாம்
ஏற்றுக்கொள்ள முடியாது” என அதிருப்தியாக கூறினார்.


எஞ்சிய போட்டியாளர்கள்:


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.


இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.