இந்த வாரம் முழுக்க நடக்கவுள்ள “பிக்பாஸ் நீதிமன்றம்” என்ற டாஸ்க்கை பற்றி முதல் இரண்டு ப்ரோமோக்கள் விவரிக்கின்றன.


டாஸ்க்கின் விதிமுறைகள் :


ஒவ்வொருவராக பிக்பாஸ் கேமரா முன் சென்று, அவர்களின் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும்.


இன்று வெளியான ப்ரோமோக்களின் தொகுப்பு :






முதல் ப்ரோமோவில், அசிமின் சாவி திருட்டு வழக்கை ஷிவின் வாதாடுகிறார். அந்த நீதிமன்ற அமர்வில், ராம் நீதிபதியாக அமர்த்தப்படுகிறார். அதில், அசிம் அந்த சாவியை சீக்ரெட் டாஸ்க்குக்காகதான் ஒளித்துவைத்தாகவும், ஏடிகே மீது உள்ள சுய காழ்புணர்ச்சிகாக இல்லை என்றும் ஷிவின் வாதாடுகிறார். 


எதிர்க்கட்சி வழக்கறிஞர் விக்ரமன், அந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்கிறார். அப்போது, “ ஒரு மனிதனின் காலில் பூட்டப்பட்டிருக்கிறது. மனிதாபிமானத்துடன் நாம் நடந்துகொள்ள வேண்டும். தன் காலில் கட்டப்பட்ட பூட்டை திறக்க அவர் சாவியை கேட்டார்” என்று விக்ரமன் தன் தரப்பு கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அசிம் ஆம் என ஒப்புக்கொண்டார்.


இரண்டாவது ப்ரோமோவில் நடந்த உரையாடல் :






விக்ரமன் : என் கேள்வியை நான் முடித்து கொள்கிறேன்.


அசிம் : நான் வேறொரு வழக்கைதான் பதிவு செய்தேன்.


விக்ரமன் : என் கேள்விக்கு பதில் சொல்லிதான் ஆக வேண்டும்.


அசிம் : வழக்கிற்கு சமந்தப்பட்ட கேள்விக்குதான் பதில் சொல்வேன்.


விக்ரமன் : நீ பேசுறியா ராப் பண்ணுறியா என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளீர்கள். 
 
நீதிபதி ராம் : ஒருவர் தொழிலை வைத்து பேசுவது தவறு


அசிம் : நீதிபதி வழக்கிற்கு சம்மந்தமாகதான் பேசவேண்டும்


விக்ரமன் : நீதிபதி அவரின் கருத்தை சொல்லலாம்


அசிம் : ஆமாம் ஆமாம்.. டாஸ்க்கின் போது வீட்டில் படுத்து தூங்குவதும் தவறுதான்


இப்படியே அசிம், விக்ரமன் மற்றும் ராம் ஆகியோருக்கு இடையே மாற்றி மாற்றி வாக்குவாதம் நடந்தது. இவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை இன்றைய எபிசோடில்தான் பார்க்க வேண்டும்.


எஞ்சிய போட்டியாளர்கள்:


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.


இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.