பணப்பெட்டியில் எவ்வளவு காசு இருக்கிறது என்பதை பொருத்தே, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதும் வெளியேறாததும் அமையும் என்று அசிம் கூறியுள்ளார்.



இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.




இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்த வாரங்களில், போட்டி கடினமாக ஆகி கொண்டு போகும். பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் நபர்கள் அனைவரும் ஸ்டராங்கான போட்டியாளர்களாக மாறினால்,  பணப்பெட்டி என்ற டாஸ்க் மூலம் அவர்களை வெளியேற்றும் வழக்கம் பிக்பாஸ் நான்காவது சீசனில் இருந்து நடந்து வருகிறது. 






நான்காவது சீசனில் கேப்ரியல்லா 5 லட்ச ரூபாயை எடுத்து சென்றார். அதற்கு அடுத்து வந்த சீசனில், சிபி சக்கரவர்த்தி 15 லட்ச ரூபாயை லாட்டரி பரிசு போல் எடுத்து சென்றார். அதுபோல், இந்த சீசனில் அசிம் பணப்பெட்டி பற்றி பேச தொடங்கினார். அப்போது, பேசிய அவர் 20 லட்சம் வந்தால்தான் அதை எடுத்து செல்வேன் இல்லையென்றால் போகமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார்.


அசிமின் நடவடிக்கைகளை தொடர்ந்து பார்த்து வரும் மக்கள், அவர் எப்போது வெளியேறுவார் என காத்திருக்கின்றனர். அந்த வகையில், அசிமின் வெற்றி கேள்வி குறிதான். இப்படி ஏதாவது, பணப்பெட்டி டாஸ்க் வந்தால், அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திகொள்வது அசிமின் கைகளில் உள்ளது