இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோக்களில் சீரியஸான காட்சிகள் இடம்பெற்ற நிலையில்,தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக்பாஸ் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் நக்கலாக சிரித்துள்ளனர்.
டாஸ்க்கின் விதிமுறைகள் :
ஒவ்வொருவராக பிக்பாஸ் கேமரா முன் சென்று, அவர்களின் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர், அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும்.
மூன்றாம் ப்ரோமோ :
மூன்றாம் ப்ரோமோவில், தனலட்சுமி நடுவராக அமர வைக்கப்படுகிறார். அதில், ட்ரெஸ்ஸை வைத்து எல்லைமீறி நகைச்சுவை செய்தனர் என ராம் தொடுத்த வழக்கை, மைனா நந்தினி வழக்கறிஞர் என்ற முறையில் அந்த வழக்கிற்காக வாதம் செய்கிறார்.
அதில் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஏடிகே, “ ராம பாரு ராம பாரு போட்டு இருக்க ட்ரெஸ்ஸ பாரு என்ற பாட்டை பாடினீர்களா” என்ற கேள்வியை அமுதவாணனிடம் கேட்கிறார்.
அதற்கு அமுதவாணன், “பாடினேன் கடைசியாக நான் சென்று கோரஸ் கொடுத்தேன் ஜயா” என்று பதிலளித்தார். குறுக்கி விசாரணை நடந்து கொண்டிருந்த போது, ஏடிகேவை தவிர்த்து பிக்பாஸ் நீதிமன்றத்தில் உள்ள அனைவரும் வயிறு குலுங்க சிரித்தனர். அவ்வளவு ஏன், நடுவராக அமர்ந்த தனலட்சுமியும் சிரித்தார். சற்று கடுப்பான ஏடிகே, “இவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கின்றனர்” என சொல்ல, அதற்கு நீதிபதியாக இருக்கும் தனலட்சுமி சிரித்து முடித்துவிட்டு, “இங்கு இருப்பவர்கள், சிரித்தால் தயவு செய்து வெளியே போங்க” என்றார்.
இந்த வாரத்தில், நீதிமன்றம் டாஸ்க் நடந்தால், வெறும் சீரியஸ் காட்சிகள் மட்டும் இருக்கும் என்று பலர் எதிர்ப்பார்த்தனர்.ஆனால், இந்த கருத்தை சுக்கு நூறாக உடைத்தது இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோ.
எஞ்சிய போட்டியாளர்கள்:
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தில் நிவாஷினி வெளியேறினார்.
இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.