இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த அறிவிப்பு இன்று கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய நாளுக்கான மூன்று ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது.


முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் குறித்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது. “பிபி ரோஸ்ட்” எனும் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும், இரண்டு பேர் கொண்ட அணிகளாக பிரிந்து, ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்ள வேண்டும். சிறப்பாக கேலி செய்பவரை, மற்ற ஹவுஸ்மேட்கள் வெற்றியாளராக  தேர்வு செய்ய வேண்டும். வெற்றி பெருபவர்களுக்கு 400 புள்ளிகள் வழங்கப்படும் என்று விதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ காட்சியில், ஜனனி-ராபர்ட் மாஸ்டர் மற்றும் அமுதவாணன் மற்றும் மணிகண்டா ஆகியோர் கலாய்த்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.







இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க்காக “ராஜ வம்சமும் அருங்காட்சியகமும்” என்ற விளையாட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில், பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறவுள்ளதாகவும், இதில் ஹவுஸ்மேட்டுகள் மூன்று அணிகளாக பிரிய வேண்டும் என்ற விதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் ராஜா குடும்பத்தில் ராணி, இளவரசி, இளவரசர்.. என அசிம் குறிப்பு எழுதிய அந்த அட்டையை வாசித்து முடிக்கும் முன்னரே, அனைத்து போட்டியாளர்களும், நான் ராஜா நான் ராணி என பந்திக்கு முந்தியது போல், பிக்பாஸ் வீட்டை குதூகலமாக மாற்றினர். பின்னர், அசிமை அனைவரும் தூக்கி விளையாடி கொண்டிருந்தனர்.






இதைதொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியது. அதில், மைனா நந்தினிக்கு எத்தனை ஓட்டுகள் என்று கேட்க, அனைவரும் அவர்களின் வாக்கை ஜனனிக்கு செலுத்தி அவரை இளவரசியாக தேர்வு செய்தனர். பின், காது கேளாத சேவகர் பதவிக்கு மைனா நின்றார்.ஆனால், அப்போதும் அவருக்கு யாரும் ஓட்டு போடவில்லை. சற்று கடுப்பான மைனா “ராணியில் இருந்து கடைசி போஸ்ட் வரை நின்றேன். எனக்கு யாரும் ஓட்டு போடவில்லை. இவர்கள் அனைவரும் என் முதுகில் குத்திவிட்டார்கள்.” என்று விளையாட்டாக பேசினார்.






இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினீஸ்கள் :


இந்த வாரம், ராபர்ட் மாஸ்டர், நிவாஷினி, ஆயிஷா,ஜனனி, அசிம், தனலட்சுமி ஆகியோர் எலிமினேஷனுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறைந்த ஓட்டுகளை பெறுபவர்கள், இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.