Bigg Boss 6 Tamil : சனிக்கிழமை பஞ்சாயத்து.. அரசியல் வசனங்களை அடுக்கிய கமல்.. பரபரக்கும் பிக்பாஸ்!

Bigg Boss 6 Tamil : இந்த விளையாட்டை மக்கள் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். அதனால் இது விளையாட்டு என்று நீங்கள் நினைத்தால்....சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற பாணியில் பதிலளித்தார் கமல்.

Continues below advertisement

வார இறுதிநாட்கள் எப்போதும் ஆஜராகும் கமல்ஹாசன், இந்த வாரம் அரசியல் கலந்த வசனத்தை ப்ரோமோவில் பேசியுள்ளார்.

Continues below advertisement

இந்த வாரம் முழுவதும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் எந்த குறையும் இல்லாதஅளவிற்கு ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் நடந்து முடிந்தது. இதில் உண்டான பிரச்னைகளுக்கு பஞ்சாயத்து செய்யவுள்ளார் கமல். இன்று வெளியான முதல் ப்ரோமோவில், “ஸ்வீட் பண்ண சொன்ன ஃபைட்டு பண்ணிட்டு இருக்காங்க. என்னைக்கி பணம் சம்பாதிக்கனு என்பதுதான் குறி ஆகிவிட்டதோ, அப்போதுதான் பதுக்கலும் சுரண்டலும் ஆரம்பிக்கும். நாடு மாதிரியே வீட்டிலும் அது ஆரம்பித்துவிட்டது. இப்போது இவர்கள் காட்டும் முகம்தான் உண்மையான முகமா.. அல்லது புதுசா போட்டுகிட்ட முகமூடியா..பார்ப்போம்.” என்று அரசியல் அர்த்தத்தை உள்ளடக்கி கமல் பேசினார்.

இரண்டாவது ப்ரோமோவில் நல்லவர் என்ற முகமூடி அணிந்திருப்பவர் யார் என்ற கேள்வியை மணிகண்டனிடம் கமல் எழுப்புகிறார். அப்படி அவர் யாரையும் பார்க்கவில்லை என மணி சொல்கிறார். அதற்கு, “இந்த விளையாட்டை மக்கள் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். அதனால் இது விளையாட்டு என்று நீங்கள் நினைத்தால்...” சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற பாணியில் பதிலளித்தார் கமல்.

இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினீஸ்கள் :

இந்தவாரம் ஏடிகே, வி ஜே மகேஸ்வரி, ராம் ராமசாமி, அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா ஆகியோர் எலிமினேஷனுக்காக நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். இவர்களில் மிக குறைந்த ஓட்டுகளை பெறுபவர், இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement