பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் தொலைக்காட்சி டாஸ்க் இருந்தது போல், இந்த வாரம் முழுவதும் ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் விளையாடபடவுள்ளது.
அதை தொடர்ந்து, பிக்பாஸ் வீடு “ கண்ணா லட்டு திண்ண ஆசையா” மற்றும் “ அட தேன் அட” என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில், அந்த ஸ்வீட் ஸ்டால் 24 மணி நேரம் இயக்கப்பட வேண்டும் என்றும், பலகாரங்களை செய்து ஆர்டர் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கல்லாவில் உள்ள பணத்தையும் பொருட்களையும் பாதுகாக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வந்த முதல் ப்ரோமோவில், ஸ்வீட் செய்யப்பட்டு அதன் தரத்தை பரிசோதனை செய்ய இனிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால், எதிர் அணியினர் அதை சுட்டிக்காட்டலாம். ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் நிற்க, அவர்களிடம் ஏடிகே மற்றும் அசிம் , “நீங்கள் எங்களிடம் பல குறைகள் கண்டுபிடித்தீர்கள். உங்கள் செயல்களுக்கு ஏற்றவாரு நாங்களும் நடந்துகொள்ள வேண்டும் ”என சத்தம் போட்டு பேசுகிறார்கள். பின்னர், ஆயிஷா “நாங்கள் செய்தது உங்களுக்கு தப்பாக தோன்றினால், அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்”என சொன்னார்.
பின்னர் இரண்டாவது ப்ரோமோவில், விக்ரமனுக்கும் அமுதவாணனுக்கும் பேச்சுவார்த்தை ஏற்ப்படுகிறது, “நீங்கள் ஏதாவது சொன்னால் நான் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் ஏதாவது சொன்னால், நீங்கள் அதை பிரச்சனை யாக மாற்றிவிடுகிறீர்கள்.” என்று அமுதவாணன் பேசினார்.
இந்த கலவரம் நடந்துகொண்டு இருக்கும் போது, ரச்சித்தாவின் ஸ்வீட் ஸ்டால் டீம்மிற்கு சென்ற ராபர்ட் மாஸ்டர், “ ஸ்வீட்டையும் பத்தரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் ஸ்வீட்டியையும் பத்தரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என சொல்கிறார்.