பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதுமாக, டி.வி சேனலாக மாறி புது புது டாஸ்க்குகளை செய்ய போகிறது என்பது நேற்றைய ப்ரோமோவில் தெரிய வந்தது. அந்த வகையில், ராசி பலன்கள் நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று வெளியான ப்ரோமோக்களிலும் பல போட்டிகள் நடத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆயிஷா போட்டிகளை தொகுத்து வழங்க, ஜனனி ஆட, ஷிவின் மற்றும் ஷெரின் ராம்ப் வாக் செய்து அசத்தினர். பெண்கள் அவர்களின்
திறமையை வெளிகாட்ட, அதற்கு போட்டியாக அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் நடித்து காட்டி கலக்கினர்.
இரண்டாவது ப்ரோமோவில், மற்ற போட்டியாளர்கள் டாஸ்கிற்கான நாடகத்தை பற்றி உரையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, ஏடிகே “ ஷெரின், ஆயிஷா, மணி ஆகியோருக்கு குப்பையை குப்பையில் போட என்ன கஷ்டம், விக்ரமனுக்கு
அவர்தான் நேர்மையானவர், மற்றவர்கள் நேர்மையானவர்கள் இல்லை என்ற கருத்து கொண்டவர்” என்று ராமிடம் புகைப்போட்டு கொண்டிருந்தார்.
இதை தொடர்ந்து வந்த மூன்றாவது ப்ரோமோவில், விக்ரமன் மீது குயின்ஸிக்கு ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. அதனால்,
விக்ரமன், அவரை சமதானம் படுத்த முயற்சி செய்கிறார்.
இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களில் சண்டை காட்சிகள் இடம் பெறாவிட்டாலும், புறம் பேசும் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, இன்றைய ஒருமணி நேர தொகுப்பில், முக்கால் மணி நேரம் உரையாடல்கள் மட்டுமே இடம்பெறும் என்பது தெரிகிறது.
பிக் பாஸ் போட்டியாளர் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.