Bigg Boss 6 Tamil : 'அஸிம் நீங்க செய்வதை செய்யுங்கள்... மக்களும் செய்ய வேண்டியதை செய்வார்கள்..கடுப்பான கமல்

Bigg Boss 6 Tamil : “நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன்”.. என்று அசீமிடம் நடிகர் கமல் காட்டமாக பேசினார்.

Continues below advertisement

வாரத்தின் இறுதிநாளான இன்று, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூன்றாம் ப்ரோமோ வெளியாகிவுள்ளது. இதில், அசீம் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, நடிகர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்த வாரம் முழுவதும் விளையாடப்பட்ட, நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க், சில போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்து காட்டியுள்ளது.  முழுசா சந்தரமுகியா மாறியா அஸிமை பார் என்ற வகையில், முகம் சுழிக்க வைக்கும் விஷயங்களை அஸிம் செய்துள்ளார்.

கோவப்படுவது மனித இயல்பு, ஆனால் அதற்கு ஒரு அளவு உண்டு. அடிக்கடி எதற்கெடுத்தாலும் கோவப்படும் அஸிமை பார்த்து வரும் மக்கள் கடுப்பாக உள்ளார்கள். தனலட்சுமியை கீழே தள்ளிவிட்டது, அனைவரிடமும் வீண் வம்புக்கு செல்வது, ஷிவினின் பாலினத்தை கேலி செய்யும் வகையில் கைதட்டி காட்டியது, அமுதவாணனின் உடல் மொழி கிண்டல் செய்து காட்யது என பல சம்பங்களை செய்து பல கேஸில் மாட்டியுள்ளார் அசீம்.

தற்போது வெளியான ப்ரோமோவில்,  “அசீம் உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன். யாருக்காக தெரியுமா உங்கள் பையனுக்காக. இதுதான் என் Strategy என்று நீங்கள் சொன்னால், மற்றவர்களிடம் நான் அஸிமிடம் கவனமாக இருங்கள் என்று சொல்ல வேண்டும். அவமானப்படுத்துவார், உடல் மொழியை கேலி செய்வார். தயாராக இருங்கள், நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். இவர்களும் (மக்களும்) செய்ய வேண்டியதை செய்வார்கள்.” என பஞ்சாயத்து செய்ய வந்த கமல் பேசியுள்ளார்.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ‘குறும்படம் போட்ட கமல்...’ கப்சிப் ஆன பிக்பாஸ் வீடு... இருக்கு இன்னைக்கு சம்பவம் இருக்கு!

இதற்கு முன் வெளிவந்த ப்ரோமோவில், நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் யாரு கீழே தள்ளிவிட்டார்கள் என்ற கேள்விக்கு அஸிம், ஏ.டி.கே ஆகிய சிலர் தனலட்சுமி என பதில் கூறினர். ஆனால் தனலட்சுமி உறுதியாக, அவர் அப்படி சொல்லவில்லை என்றும் தப்பு செய்தால் மன்னிப்பு கேட்டு வெளியே செல்கிறேன் என்று பேசினார். அதற்கு குறும்படம் போடுகிறேன் என கமல் சொன்னார்.

 

Continues below advertisement