இந்தவாரம், பிக்பாஸ் வீட்டை விட்டு அசல் கோலார் எலிமினேட்டாகி வீட்டிற்கு சென்றார் என தகவல் வெளியாகிவுள்ளது.


முன்பாக, குயின்சி அனைவரிடம் பேசியபோது, அவரின் முழங்கையை அவரின் அனுமதியில்லாமலே தடவி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், கடுப்பான குயின்சி அவரின் கையை தட்டி விட்டார். அதைதொடர்ந்து, மகேஸ்வரியின் அருகில் அமர்ந்து, அவரின் முட்டியை கூசுவதுபோல் தடவினார். அடுத்து, நந்தினியின் கைகளை விடாமல் பிடித்து கொண்டு இருந்தார். இவர் தேடி தேடி, பெண்கள் இருக்கும் இடத்திலேயே சென்று அமர்ந்து அவர்களை கட்டிப்பிடித்து மன்மதலீலை வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.






இதனால், மக்கள் பலர் “ அவனுக்கு ரெட்-கார்ட் கொடுங்க, இவன் ஒரு பொறுக்கி, பெண்களை கட்டிப்பிடித்துக்கொண்டு இவன் செய்யும் வேலைகள் அறுவெறுப்பை தருகிறது. கமல்ஹாசன் சார், இவனை எதிர்த்து ஏதாவது கேளுங்கள்.”என்று அவர்களின் ஆதங்கத்தை ட்வீட் இன்றளவும் டீவிட் செய்து வருகின்றனர்.


ஜி.பி முத்து, மக்களின் மனதில் இருக்கும் கேள்வியை அசல் கோலாரிடம் நேரடியாக கேட்டுவிட்டார்.  “ தம்பி உங்களுக்கு ஆம்பளையே பிடிக்கமாட்டுது. நீங்க ஏன் பொம்பள பிள்ளைங்க பக்கதிலே உக்காந்து இருக்கீங்க” என்று கேள்வி கேட்டார். 






இந்த வார எலிமினேஷனில், ஜனனி, ரச்சித்தா, அசீம், ஆயிஷா, ஏடிகே, அசல் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். குறைந்த ஓட்டிகளை பெறுபவரை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்றிவிடும். அந்தவகையில், இருப்பதிலே குறைந்த ஓட்டுகளை பெற்று ராப் பாடகர் அசல் கோலார் வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகிவுள்ளது.


பிக் பாஸ் போட்டியாளர்கள் :




போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.


மேலும் படிக்க : Actor Samantha: கையில் ட்ரிப்ஸ்... மருத்துவமனையில் அனுமதி... சமந்தாவுக்கு என்ன ஆச்சு?