தீபாவளி கொண்டாடத்தை தொடர்ந்து பழைய நிலைக்கு பிக்பாஸ் வீடு சென்றுள்ளது. இந்த நிலையில், 16 வது நாளுக்கான நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் விளையாடி கொண்டிருக்கும் போது, மகேஸ்வரி என்ற பெயர் எழுதிய பொம்மை இருக்கா என்று கேட்க, பொம்மையை வைத்துக்கொண்டே இல்லை என தனலட்சுமி கூறுகிறார். உடனே ஷிவினும் தனலட்சுமியின் கண்ணத்தில் முத்தம் கொடுக்கிறார். 






மகேஸ்வரி அவரின் கையில் ஷிவின் என்று பெயர் எழுதிய பொம்மையை வைத்துக்கொண்டு, என் பெயர் எழுதிய பொம்மையை கொண்டு போனால் இதை நான் எடுத்து உள்ளே வைப்பேன். 


நேரடியாக, தனலட்சுமியுடம் சென்ற மகேஸ்வரி, “ நீங்க உள்ள என் பொம்மைய வைக்கவில்லை என்றால் நான் அவுட் ஆகி விடுவேன். ஆனால் நான் வைக்கவில்லை என்றால் நீங்க அவுட் ஆக மாட்டீங்க. இது பெர்சனலா பண்ற மாறி இருக்கு” என்றார். இதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “இது கேம் தான, நான் பெர்சனலா தான் பண்றேன்...டைரக்டா நான் நாமினேட் பண்றேன்” என்று தனலட்சுமி சொன்னார்.


நீயும் பொம்மை நானும் பொம்மை :


 இந்த போட்டியை விளையாட மொத்தம் 19 பொம்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொம்மையிலும் ஒவ்வொரு போட்டியாளர்களின் பெயர் எழுதி இருக்கும்.டால் ஹவுஸ் எனும் இடத்தில் 18 இடங்கள் மட்டுமே இருக்கும். போட்டியாளர்கள், கேம் துவங்கிய உடன், கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொம்மையை எடுத்து அந்த வீட்டிற்குள் வைக்க வேண்டும். வீட்டிற்குள் எந்த பொம்மை இடம் பெறவில்லையோ, அந்த பொம்மையில் இருக்கும் பெயர் கொண்ட நபர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். 




காலையில் இருந்து வந்த மூன்று ப்ரோமோக்களை பார்த்தால், இன்று நாள் முழுக்க, இந்த பொம்மை டாஸ்க்கையே வைத்து ஓட்டிவிடுவார்கள் என தோன்றுகிறது. விளையாட்டு பொம்மையை வைத்து விளையாடப்பட்டாலும், வினையில் முடிய பல வாய்ப்புகள் உள்ளது. ஆக, பிக்பாஸ் நினைத்தது
நடக்கப்போகிறது.


பிக் பாஸ் போட்டியாளர்கள் : 




போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.