பிக்பாஸ்  நிகழ்ச்சியின் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் கதை சொல்லும் நேரம் டாஸ்க் தொடர்கிறது. 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் ஆரம்பம் முதலே நல்ல விறுவிறுப்பாக சென்றது.


இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார். 


இதனைத்தொடர்ந்து இந்த வார டாஸ்க் ஆக  “கதை சொல்லும் நேரம்”  கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிசை எண் படி கதை சொல்லலாம் என்றும், லிவிங் ஏரியாவில் 3 பஸ்சர்கள் வைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது கேட்டுக் கொண்டிருக்கும் சக போட்டியாளர்கள் 60 நொடிகளுக்குள் 3 பஸ்சர்களை அழுத்தினால் கதை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம். அப்படி ஒன்று அல்லது 2 பஸ்சர்கள் மட்டும் அடிக்கப்பட்டால் தொடர்ந்து அவர்கள் கதை சொல்லலாம். 






இப்படி 8 பேரை மட்டுமே காப்பாற்றி அடுத்த வார நாமினேஷன் ஃப்ரீ பிராசஸில் இருந்து தப்பிக்க வைக்கலாம். அதேபோல் அதிக பஸ்சர் அடிக்கப்படும் போட்டியாளர் நேரடியாக நாமினேஷன்  பிராசஸூக்கு செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அஸீம், ஜனனி போன்றவர்களின் கதை நிராகரிக்கப்பட நிவாசினி, தனலட்சுமி  நாமினேஷன் ஃப்ரீ பிராசஸூக்கு சென்றனர். 


இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் விஜே கதிரவன், மகேஸ்வரி உள்ளிட்டோர் கதை சொல்ல அது சக போட்டியாளர்களால் நிராகரிக்கப்படுகிறது. அதேசமயம் மைனா நந்தினி தனது கதையை சொல்ல 2 பஸ்சர்கள் மட்டுமே அடிக்கப்படுகிறது. இதனால் அவரும் நாமினேஷன் ஃப்ரீ பிராசஸூக்கு செல்ல உள்ளார். இந்த டாஸ்க்கில் ரிஜெக்ட் செய்யப்படுவதன் மூலம் பிக்பாஸ் வீட்டின் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் சக போட்டியாளர்கள் மீதான  மனநிலை வெளியே வர தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.