பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வாரம், ஃப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் ஃப்ரீஸ் ரிலீஸ் என்ற டாஸ் நடைபெறும்;இதில் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவர். பல நாள் குடும்பத்தை காணாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்த டாஸ்க் ஒரு வரபிரசாதமாக அமைகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் உற்றார்கள், அவர்களுக்கு சம்மந்தப்பட்ட நபர்களுடன் மனம் விட்டு பேசுவர்;அத்துடன் போட்டியை நேர்த்தியாக விளையாட அறிவுரையும் கூறுவர். அந்தவகையில், இந்த சீசன் 78 நாட்கள் கடந்த நிலையில், இப்போது ப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் நடக்கவுள்ளது.பிக்பாஸ் வீட்டில் இந்த டாஸ்க் குறித்த அறிவிப்பு வந்த பின், போட்டியாளர்கள் அனைவரும் சந்தோஷத்தில் பொங்கினர்.
ரோஸ் கொடுத்து அசத்திய மைனா நந்தினியின் கணவர்
இன்று வந்த இரண்டாவது ப்ரோமோவில், மைனா நந்தினியிடம் அவரது கணவர் “ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் உனக்கும் தகுதியே இல்லை. நீ அப்படிதான் விளையாடிட்டு இருக்க. தப்பு நடந்த தட்டி கேட்கணும். மற்றவர்கள் உன்னைப் பற்றி தவறாக பேசிவிடுவார்கள் என்ற பயம் உனக்குள் இருக்கு. அது வேண்டாம்.
இந்த விளையாட்டிற்கு உன்னை 100 % சமர்பிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உன்னை பற்றி நல்ல எண்ணம் வரும்.”என்று அறிவுறுத்தல் கூறினார். இதற்கு முன்பாக ஷிவின், மைனாவின் கணவரான யோகியை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதற்கு, “அடியேய் அது என் புருஷன் டி” என்று மைனா வேடிக்கையாக கூறினார். தற்போது உள்ளே வந்த அவர், ஷிவினுக்கு ரோஸ் கொடுத்துள்ளார்.
சிரிப்பு காட்டிய அமுதவாணனின் மகன்
மூன்றாவது ப்ரோமோவில், அமுதவாணனின் மொத்த குடும்பமும் உள்ளே வந்தது. அமுதுவின் மகன், உள்ளே உள்ள போட்டியாளர்கள் போல் நடித்து காட்டி அசத்தி அனைவரையும் சிரிக்க வைத்தார். தற்போது, பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில், ரச்சித்தாவை காண அவரது கணவர் தினேஷ் வருவார் மற்றும் மணிகண்டா ராஜேஷை காண ஐஸ்வர்யா ராஜேஷ் வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அத்துடன், இந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், அமுதவாணன், கதிரவன், மணிகண்டா, நந்தினி, ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோர் எலிமினேஷனுக்கான நாமினிஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், ஐஸ்வர்யா ராஜேஷை உள்ளே அழைக்கத்தான் மணிகண்டாவை உள்ளே வைத்திருக்கின்றனர் என்ற பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் நிலவிவருகிறது.