பிக் பிரதர் என்கிற டச்சு மொழி நிகழ்ச்சியை தழுவி உலகெங்கிலும் பல மொழிகளில் பிக்பிரதர் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தியாவில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது . முதலில், இந்தியில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி, கன்னடா, வங்கம், தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. 


சீசன் 6:


பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக நடிகர் நடிகையரும் திரையுலகத்தை சார்ந்த இதர பிரபலங்களும், ஒரு சில 
சமூக ஆர்வளர்களும் கலந்து கொண்டு வந்தனர். வழக்கத்திற்கு மாறாக, பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியில் பொதுமக்களாகிய ஷிவின் மற்றும் தனலட்சுமி ஆகிய  இருவர் கலந்து கொண்டனர்.




வேடிக்கை, சண்டை, காதல், சோகம், எரிச்சல், துக்கம், கருணை, கோவம், வெறுப்பு, மகிழ்ச்சி, புறம் பேசுதல், பொறாமை, பெருந்தன்மை, அழுகை ஆகிய அனைத்து விஷயங்களை கலந்த குட்டி உலகமே பிக்பாஸ். இந்நிகழ்ச்சியை மக்கள் பலர் பார்க்க காராணமே, மனித உணர்ச்சிகளை அப்படியே அப்பட்டமாக திரையிட்டு காட்டுவதானால்தான். இந்த நிகழ்ச்சியில் அனைத்தும் திட்டமிட்டு  நடத்தப்படுகிறது என்று பலர் சொல்வது ஒரு புறம் இருந்தாலும், டி.ஆர்.பியில் ஹிட் அடிக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது.


இதை ஒளிப்பரப்பாக்கும் தனியார் தொலைக்காட்சி, அவர்களின் பிரபலங்களை மட்டும் பல நாட்களுக்கு தக்கவைக்கும் குற்றச்சாட்டு கடந்த 5 சீசன்களாக இருந்து வருகிறது. அத்துடன் பிரபலங்களை மட்டுமே போட்டியாளராக அழைக்கின்றனர் என்ற பேச்சும் இருந்து வந்தது.




போட்டியாளர்கள்:

அதற்கேற்றவாரு இந்த சீசனின் முதல் வாரத்தில், ஜி.பி. முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். ஏழாம் வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார். எட்டாம் வாரத்தில் டபுள் எவிக்‌ஷனில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறினர். ஒன்பதாம் வாரத்தில் ஜனனி வெளியேறினார். கடைசி வாரத்தில் தனலட்சுமி வெளியேறினார்.


இவர்கள் சென்ற பின், ஷிவின் கணேசன்,  முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ்,  ரச்சிதா, தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன்,  , விசிக மாநில விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 9 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ரச்சித்தா, அமுது, அஸிம், மைனா நந்தினி ஆகியோர் இந்த தொலைக்காட்சியை சார்ந்தவர்கள்தான்.




ஆணாதிக்கம் நிறைந்ததா..? 


இது ஒருபக்கம் இருக்க, பிக்பாஸ் முதல் சீசனில் , ஆரவ் டைட்டிலை வென்றார். அதைத்தொடர்ந்து வந்த அடுத்தடுத்த சீசன்களில், ரித்விக்கா, முகன் ஆரி, ராஜு ஆகியோர் பிக்பாஸ் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 


இந்த பட்டியலில் ஒரு பெண் மட்டுமே டைட்டிலை வென்றுள்ளார். அத்துடன், 6 வது சீசனில் அடுத்தடுத்து பெண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வரலாற்றில் நடந்தவையே மீண்டும் நடக்கும் என்பது பலரின் கூற்றாக இருக்க இந்த முறையும் ஆண் போட்டியாளர்தான் டைட்டிலை அடிப்பார் என்ற எண்ணமும் இருந்து வருகிறது.