Bigg boss 6 Tamil : பணப்பெட்டியுடன் வெளியேறிய விஜே கதிரவன்... பிக்பாஸில் நடந்த ட்விஸ்ட்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் விஜே கதிரவன் பணப்பெட்டியுடன் வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் விஜே கதிரவன் பணப்பெட்டியுடன் வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement

ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்றது. 100 நாட்களை கடந்து விட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களில் முடிவடைய போகிறது. யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என்ற ஆர்வம் இப்போதே ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பானபோது ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர். அதன்பின் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி உள்ளே வந்தார். 

அப்படி, இப்படி என 100 நாட்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் வழக்கம்போல பணப்பெட்டியை அனுப்பி இருவரை வீட்டுக்கு அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டார். அதாவது பணப்பெட்டிக்கு பதில் இம்முறை பணமூட்டை வந்தது. அதில் ரூ.3 லட்சம் பணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

முந்தைய சீசன்களை போல பணமதிப்பு அதிகரிக்க தொடங்கியவுடன் யாரேனும் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைனா நந்தினி அல்லது அமுதவாணன் இருவரில் யாரேனும் ஒருவர் அதை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்விஸ்ட் தரும் வண்ணம் விஜே கதிரவன் பணமூட்டையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்னும் இறுதிப்போட்டிக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் என்னென்ன எதிர்பாராத ட்விஸ்டுகள் காத்திருக்கிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

Continues below advertisement