பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 100 நாட்கள் கடந்துவிட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் ஏடிகே குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


இப்போது, அமுதவாணன், அஸிம், கதிரவன், மைனா நந்தினி, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளே இருக்கின்றனர். பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில், எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியே அனுப்பட்டபோட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் பொங்கலை கொண்டாடினர். பொங்கல் சிறப்பு விழாவில், பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையுமான டிடி நீலகண்டனும் பங்குபெற்றுக்கொண்டார். இந்நிலையில், டிடி விக்ரமனிடம் பேசியதாவது, 


டிடி : ஜனவரி 14 அன்றுதான் தமிழ்நாடு என்ற பெயர் வந்த நாள். அதற்காக பல நபர்கள் போராடியுள்ளனர்


விக்ரமன் : ஆமாம். சங்கரலிங்கனார் என்ற தியாகி, 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கோரிக்கையை வைத்தார். ஆனால், அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அவரும் இறந்து விட்டார்.


பின், 1968 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தார். இவரின் ஆட்சியில் ஜனவரி 14 ஆம் தேதி, நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” என்ற 
பெயர் கொடுக்கப்பட்டது. போராடி இந்த பெயரை வாங்கி தந்த தியாகிகளுக்கு, இந்த பொங்கலை சமர்ப்பிக்கிறோம்.


டிடி : என்னைக்கா இருந்தாலும் தமிழ்நாடு தமிழ்நாடுதான். அதற்கு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது இல்லையா..


விக்ரமன் : தமிழ்நாடு தமிழ்நாடுதான்.


டிடி :  இதில் ஒரு விஷயம் இருக்கு. இப்போ புரியாது. வெளியே வந்தால் புரியும்






இவர்களின் இந்த உரையாடல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம வைரலாகி வருகிறது. அத்துடன், இந்த வீடியோவை வைத்து விக்ரமன் ரசிகர்கள் அவருக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் 


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். ஏழாம் வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார். எட்டாம் வாரத்தில் டபுள் எவிக்‌ஷனில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறினர். ஒன்பதாம் வாரத்தில் ஜனனி வெளியேறினார். பத்தாம் வாரத்தில் தனலட்சுமி வெளியேறினார். அதன் பின், மணிகண்டன், ரச்சித்தா, ஏடிகே ஆகியோர் வெளியேறினர்.