பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி நேர ட்விஸ்ட் ஆக போட்டியாளர் ஜனனி வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement


ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 68 நாட்களை எட்டியுள்ள நிலையில் இறுதிப்போட்டி வரை யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 






இதற்கிடையில் இந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்தனர். இதில் ஏடிகே வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கடைசி நேர ட்விஸ்ட் ஆக ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  






ஏற்கனவே நேற்றைய எபிசோடில் யாரை நாமினேஷன் செய்துள்ளார் என்பதை வெளிப்படையாக பேசுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக கமல் ஜனனியை கண்டித்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணனின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக புகார் எழுந்த போது அதனை ஜனனி மறுத்திருந்தார். ஆனால் தொடர்ந்து அவர் அமுதவாணனின் சப்போர்ட் இல்லாமல் செயல்பட வில்லை. அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் பல வாரமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


அதேபோல் கடந்த வார டாஸ்க்கில் ஜனனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது தவறு. நான் தான் ஜெயித்தேன் என விக்ரமன், எவ்வளவோ சொல்லியும் பிற போட்டியாளர்கள் கேட்கவில்லை. ஆனால் விக்ரமன் தான் ஜெயித்தார் என கமல் குறும்படம் போட்டு காட்டி விட்டார். 






இந்நிலையில் தான் ஜனனி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க தவறான செயல் என ஜனனி ஆர்மியினர் சமூக வலைத்தளத்தில் பொங்கி வருகின்றனர்.