BiggBoss 6 Tamil: அஸிமை அடிக்கப்போன சீரியல் நடிகை..! படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்..!

சீரியல் படப்பிடிப்பில் பிக்பாஸ் போட்டியாளர் அஸிம் எப்படி நடந்து கொள்வார் என்பதை சீரியல் நடிகை சுபத்ரா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சீரியல் படப்பிடிப்பில் பிக்பாஸ் போட்டியாளர் அஸிம் எப்படி நடந்து கொள்வார்? என்பதை சீரியல் நடிகை சுபத்ரா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

பிக்பாஸ் புகழ் அஸிம்:

ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 68 நாட்களை எட்டியுள்ள நிலையில் இறுதிப்போட்டி வரை யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இதற்கிடையில் இந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்தனர். இதில் ஏடிகே வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் இருந்து சக போட்டியாளர்களிடையே பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் மிக ஆக்ரோஷமாக நடந்துக் கொள்ளும் அஸிம், வாரா வாரம் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்வதையே வழக்கமாக்கி கொண்டுள்ளார். 

சீரியல் ஹீரோ:

ஆயிஷா தொடங்கி அந்த நிகழ்ச்சியில் போட்டியிட்டவர்கள் அனைவரிடமுமே வம்பிழுத்து, பின்னர் கமலிடம் வாங்கிக் கட்டி கொள்வது என அந்த நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருப்பதற்கு அஸிமும் ஒரு காரணமாக இருக்கிறார். இதனிடையே சீரியல் படப்பிடிப்பில்  அஸிம் எப்படி நடந்து கொள்வார் என்பதை சீரியல் நடிகை சுபத்ரா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக அவர் நடித்திருந்தார். 

சீரியல் படப்பிடிப்பில் வாக்குவாதம்:

கதைப்படி சீரியலில் ஹீரோயின் கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சி இருக்கும். அதனால் அவர் காலை 7.30 மணிக்கே வந்து ரெடியாகி விடுவார். ஆனால் 11 மணிக்கு வரும் அஸிம் காட்சிகளில் நடிக்கும் போது பல கரெக்‌ஷன்களை சொன்னார். மேலும் அவரால் ஷூட் முடிய இரவு 10 மணி வரை ஆகும். எவ்வளவோ சொல்லியும் இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் டென்ஷனான ஹீரோயின் நீங்க வர்றதே லேட்..இங்க வந்து ஏன் டிஸ்கஷன் பண்றீங்க என அஸிமிடம் கேட்டார். அதற்கு நீ என்ன இயக்குநரா என சொல்லி, அஸிம் வாக்குவாதம் செய்தார். 

அதேபோல் நடிகை தேவிப்ரியா அந்த சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். அவரைப் பற்றி அஸிம் ஏதோ சொல்லியிருந்தார். அப்போது சீன்ல நடிக்கிறப்ப அந்த நேரத்துல ஏதும் தப்பு பண்ணிருக்கன்னா நீ இப்படி பேசலாம். நான் சும்மா இருக்கேன். இப்படி நீ என்ன இந்த வார்த்தையை சொல்லலாம் என கேட்டார்.

உடனே அஸிம், இயக்குநரிடம் நான் இவங்களை வாடி, போடின்னு கூப்பிடட்டா என கேட்க, ஷூட்டிங் ஸ்பாட்டே பரப்பரப்பாகி விட்டது. அவருக்கு எந்த அளவுக்கு கோபம் வருமோ, அடுத்த நிமிடமே அதை மறந்து விடுவார். அதேபோல் அந்த ஹீரோயினுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏதோ பேச, அவர் அஸிமை அடிக்கப் போய் விட்டார் என சுபத்ரா கூறியுள்ளார். 

Continues below advertisement