Bigg Boss 6 Tamil: 76 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனலட்சுமி.. இத்தனை லட்சம் சம்பளம் பெற்றாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள தனலட்சுமி எவ்வளவு சம்பளம் பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள தனலட்சுமி எவ்வளவு சம்பளம் பெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. 75 நாட்களை கடந்துள்ள இந்நிகழ்ச்சியை வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.  75 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுமாராகவே சென்று வருகிறது. எந்தவித சுவாரஸ்ய ட்விஸ்டுகளும் இல்லாமல் வலுவான போட்டியாளர்கள் இருந்தும் ஆரோக்கியமான வாக்குவாதம் செய்யாமல் அடிதடி சண்டைக்கு சென்று பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றனர். 

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் போட்டியாளர் தனலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி மக்கள் போட்டியாளராக உள்ளே அனுப்பப்பட்டார். முதல் சில வாரங்கள் கண்டென்ட் தனலட்சுமி என பெயர் சொல்லும் அளவுக்கு ஜிபி முத்து தொடங்கி அனைவரிடத்திலும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சில நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் கத்தி கத்தியே டாஸ்கில் ஈடுபடும் அவரை பல நேரங்களில் கமல் கண்டித்துள்ளார். 

அதேசமயம் இம்முறை குறும்படம் தனலட்சுமிக்காக தான் முதன்முதலாக ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் கேமரா முன்னாடி நின்று எப்படியாவது என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்றெல்லாம் பேசிய தனலட்சுமி தற்போது வெளியேறியுள்ளார்.  அவரது வெளியேற்றம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது என்றாலும், 76 நாட்கள் தாக்குப்பிடித்து ஆடியதே பெரிது என அவரை பாராட்டியும் வருகிறார்கள். இந்நிலையில் 75 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் வீதம் ரூ.11.40 லட்சம் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவர் மென்மேலும் வளர வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

Continues below advertisement