Bigg Boss 6 Tamil: ‛அமைதியா இருக்கு... ரொம்ப அமைதியா இருக்கு...’ இது பிக்பாஸ் வீடு தானா?

Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் சீசனில் நடத்தப்பட்ட நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் இன்றுடன் நிறைவடைகிறது.

Continues below advertisement

இன்று வந்த மூன்று ப்ரோமோக்களில், முதல் ப்ரோமோவில் டால் ஹவுஸ் கேம் விளையாட்டு தொடர்வது போல் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மீதம் உள்ள இரண்டு ப்ரோமோக்களில் கிண்டலும் கேலியும், ஆடலும் பாடலும் நிறைந்துள்ளது.

Continues below advertisement

தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு, இந்த வாரம் முழுவதும் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் விளையாடப்பட்டது. இந்த போட்டி க்யூட்டான பொம்மை சம்மந்தப்பட்டதாக இருந்தாலும், இது பிக்பாஸ் வீட்டை இரண்டாக்கியது. இன்று வந்த முதல் ப்ரோமோவில், டாஸ்க்கின் இறுதி கட்டத்தை நெருங்கிய போட்டியாளர்கள், அசீம் மற்றும் விக்ரமன் என்ற பெயர் எழுதப்பட்ட பொம்மைகளை உள்ளே வைக்க மறுக்கின்றனர். இதனால், இரு நபர்களையும் பிக் பாஸ், போட்டியை விட்டு வெளியேற்றினார்.

இதற்கு அடுத்த வந்த இரு ப்ரோமோக்களில், விளையாட்டை பின் தொடர்ந்த வினைகள் தொடர்கிறது. அவுட்-டான போட்டியாளர்கள் வீட்டின் வெளியே சென்று உறங்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்தது. இவ்வளவு நாள் ரத்த களம் ரண களமாய் காட்சியளித்த பிக்பாஸ் வீடு, மழை பெய்து நின்றது போல், மயான அமைதியாக இருந்தது.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கிண்டலும் கேலியும், ஆடலும் பாடலும் தொடர்கிறது. ஆக்ரோஷமாக காணப்பட்ட அசீம், கூலாக வெளியே சென்று உறங்குகிறார். பின் ஏடிகே, அமுத வாணனை பற்றி அருமையான பாடலை பாட வீட்டில் உள்ள பெண்கள் அதற்கு நடனம் ஆடுகின்றனர். 

 

பிக் பாஸ் போட்டியாளர்கள் :


போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சியில் இதுதொடர்பான காட்சிகளை காணலாம். ஒரு மணி நேர தொகுப்பை காண விஜய் டி.வியை இரவு 9:30 மணிக்கு பார்க்கவும். முழு நேரலையை காண, டிஸ்னி ஹாட்ஸ்டார் பிளஸ்-ஐ காணவும்.

 

 

Continues below advertisement