பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம், சொர்கம் நரகம் டாஸ்க் விளையாடப்படவுள்ளது.
இந்த வாரத்தின் துவக்கத்தில் எப்போதும் போல் நடக்கும் நாமினேஷன் நடைப்பெற்றது. அதில், டிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்ஷன் நாமினீஸ்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இன்று வந்த முதல் ப்ரோமோவில், இந்த வாரம் முழுவதும் விளையாடப்படவுள்ள கேம் பற்றிய விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளது.
சொர்கம் - நரகம் டாஸ்க் :
வழக்கம் போல் இரு அணிகளாக, பிக்பாஸ் பாஸ் போட்டியாளர்கள் பிரிக்கப்படுகின்றனர். இதில், நரகத்தில் உள்ளவர்களை சொர்க்கத்திற்கும், சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கும் மாற்ற, இரு குறுக்கு வழிகள் உள்ளது. நரகத்தில் அதிக நேரம், சைக்கிள் பெடலை அடித்தவர்கள், சொர்க்கத்திற்கு செல்லலாம். இல்லையென்றால், நரகவாசிகள் கோட்டினை தாண்டி சுரங்கம் வழியாக சென்றும் சொர்க்கத்தை அடையலாம். அதுபோல், சொர்க்க வாசிகள் கலந்து பேசி அவர்களில் ஒருவரை நரகத்திற்கு அனுப்பலாம்.
இப்படியாக அந்த டாஸ்க்கினை விளையாட துவங்கிய போட்டியாளர்கள் இடையே புது சண்டை ஒன்று முளைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இரண்டாம் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. ஜனனிக்கும், தனலட்சுமிக்கும் அதிக வாய்ப்புகளை கொடுத்து பாரபட்சமாக அமுதவாணன் நடந்து கொள்கிறார் என அஸிம் குற்றம் சாட்டுகிறார். அமுதவாணன் சிலவற்றை விளக்க முயற்சி செய்யும் போது, அதை அஸிம் மதிக்காமல் இருக்கிறார். அத்துடன் அந்த ப்ரோமோ நிறைவடைந்தது.