பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஏ.டி.கே மற்றும் ராம் ஆகிய இருவரும் விக்ரமன் பற்றி புறம்பேசும் வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது.


பிக்பாஸ் ஒரு பொழுபோக்கு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பதால், இதில் சண்டை, சச்சரவு, வேடிக்கை, காமெடி, ஆடல் பாடல் என அனைத்தும் அடங்கியிருக்கும். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், சக போட்டியாளர்களிடம் மற்றவர்களை பற்றி புறம் பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். புறம்பேசுவது தவறு என்றாலும், இதில் நிஜ வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் விஷயம்தான். ஆனால், டாஸ்க்குகளை விளையாடுவதை விட, இந்த சீசனில் பங்குபெற்றுள்ள ஏடிகே சதா நேரம் புறம்பேசுவதையே வேலையாக வைத்து இருக்கிறார்.






முன்பெல்லாம், அஸிம், ஏடிகே மற்றும் ராம் ஆகியோர் சேர்ந்து ஜனனி மற்றும் தனலட்சுமி பற்றி புறம் பேசினர். பின்பு, அஸிமுக்கும் ஏடிகேவிற்கும் பெரிய சண்டை ஒன்று வெடித்து, அந்த இருகூட்டு பறவையை பிரித்தது. இப்போது, ராம் மட்டுமே அவரின் கூட்டணியில் எஞ்சியுள்ளார். இவருடன் கூடி பேசிய ஏடிகே, விக்ரமனை பற்றி பேசியுள்ளார்.அவர் பேசிய அந்த வீடியோவை, நெட்டிசன்கள் ஷேர் செய்து “விக்ரமனுடன் இருந்தால் மற்றவர்களை பற்றி புறம்பேசுவதையும், விக்ரமன் இல்லாவிட்டால், அவரை பற்றி பேசுவதையும் வேலையாக வைத்திருக்கிறார் ஏடிகே” என ட்வீட் செய்துள்ளனர்.


இந்தவாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன் நடக்கவுள்ளது. அதனால், பல போட்டியாளர்கள் மும்மரமாக விளையாட துவங்கியுள்ளனர். ஆனால் சிலர் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றனர். இதில், பெரிதாக விளையாடாமல், மிக்சர் தின்பவர்களை வெளியேற்றினால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.


எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் :


இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியேறினார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் ஆனார். ஐந்தாம் வாரத்தில் நிவாஷினி வெளியேற ஆறாம் வாரத்தில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். கடந்த வாரத்தில் குயின்ஸி வெளியேற்றப்பட்டார்.


எஞ்சிய போட்டியாளர்கள் :




இவர்கள் சென்ற பின், திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், ஜனனி  மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது