Bigg Boss 5 Tamil Day 64: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை அடுத்து டிசம்பர் 5-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் மீண்டும் அபிஷேக் எலிமினேட்டாகி வெளியேறி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான்று இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் விளையாட்டு, நாமினேஷன் ஆகியவை நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில், ‘சுத்தி சுத்தி வந்தீங்க’ விளையாட்டு பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றிருக்கிறது. இதில், மியூசிக்கல் சேர் விளையாடும் ஹவுஸ்மேட்ஸ், இறுதியில் யார் வெற்றி பெறுகிறாரோ அவர்தான் இந்த வாரத்திற்கான தலைவர் என பிக் பாஸ் தெரிவிக்கிறார். கடைசியில், அமீர், அக்ஷ்ரா மட்டும் தலைவர் பதவிக்காக போட்டியிட, அமீர் போட்டியில் வெல்கிறார். ஆனால், நாணயம் வைத்திருக்கும் பாவனி, தனது சக்தியைப் பயன்படுத்தி தலைவர் பதவியை மாற்ற வேண்டுமா என பிக் பாஸ் கேட்கும்போது, மாற்ற தயாராகிறார் அவர். இதனால், ஷாக்காகிறார் அமீர். எனினும், நடந்தது என்ன என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
ப்ரொமோ: 2
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்