Bigg Boss 5 Tamil Day 8 Promo 2: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் முதல்வார எலிமினேஷன் வாக்களிப்பு இன்று முதல் தொடங்குகிறது. வாரத்தின் முதல்நாளான இன்றே  அதற்கான வாக்கெடுப்பு நடப்பதால், வீடு சூடுபிடிக்கிறது. ஏற்கனவே முதல் ப்ரொமோ வெளியான நிலையில், இரண்டாவது ப்ரொமோ சற்று முன் வெளியானது. அதில் எலிமினேஷனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு பெயரை பிக்பாஸ் அறிவித்தார். அதை போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கேட்டு அதிர்ச்சியாவதும், நதியா ஒரு படி மேலே போய்... ‛வெச்சு செஞ்சிட்டீங்களே...’ என்று ஆதங்கப்படுவதும், ‛ப்ரியங்கா தனக்கே உரிய பாணியில்... கொளுத்திப் போடு கொளுத்தி போடு....’ என அலற, இன்று உண்மையிலேயே கொளுந்து விட்டு எரியப்போகிறது பிக்பாஸ் வீடு...


இதோ அந்த தீப்பற்றும் ப்ரொமோ...


 






மேலும் இன்றைய முக்கியச் செய்திகளை அறிய...