Bigg Boss 5 Tamil Day 8, Promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் இன்று தொடங்க உள்ளது. முதல் வாரம் முழுவதும் ஜாலி, கொண்டாட்டம், நட்பு, பாசம் என ஒரே நெருக்கமாய் முடிந்தது. ஆனால் அது இன்று முதல் மாறும் . காரணம், இன்று தான் வரும் வாரத்திற்கான எலிமினேஷன் செய்வதற்கான நாமினேஷன் தொடங்குகிறது. அதற்கான ப்ரொமோ சற்று முன் வெளியானது .


அதில் வழக்கம் போல பிக்பாஸ் எலிமினேஷன் அறிவிப்பை வெளியிடுகிறார். அதில் , ‛வீட்டில் இருக்கும் அனைவரும் நல்லவங்க... என்று கூறி நீங்க நல்லவங்க வேஷம் போடாம இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்....’ என்று எடுத்த எடுப்பிலேயே குண்டை போடும் பிக்பாஸ், கன்பெக்ஷன் அறைக்கு போட்டியாளர்களை அழைத்து, நாமினேஷன் செய்ய அறிவுறுத்துகிறார். அதன் படி ஒவ்வொருவராக நாமினேஷனை தொடங்குகின்றனர். 


இசைவாணிக்கு எதிராக அக்ஷரா ஓட்டளித்தார். தன்னை அவர் டார்க்கெட் செய்வதாக அதற்கு காரணம் கூறுகிறார். பின்னர் அபிஷேக் வந்து அக்ஷராவுக்கு ஓட்டளிக்கிறார். அவரால் கம்பர்டபுளாக இருக்க முடியவில்லை என்று அபிஷேக் அதற்கு காரணம் கூறுகிறார். பின்னர் இமான் அண்ணாச்சி வந்து அபினவ்விற்கு ஓட்டளித்தார். பின்னர் அபினவ் வந்து இசைவாணிக்கு எதிராக ஓட்டளித்தார். எல்லோரிடமும் அவரால் ஜெல் ஆக முடியவில்லை என இசைவாணி மீது அவர் குற்றம்சாட்டினார். 


குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாக்களித்ததை காட்டும் இந்த ப்ரொமோவின் அடிப்படையில் இசைவாணி அதிக ஓட்டுகளை பெறுவார் என்று தெரிகிறது. அவரை தொடர்ந்து அக்ஷரா மற்றும் அபினவ் ஆகியோரும் ஓட்டுகளை பெற்று இந்த வார எலிமிேஷனலில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. 


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண