Biggboss Tamil 5 -Season 5 Episode 8
இன்று உலக மனநல நாளையொட்டி, புத்தகப் பரிந்துரையாக, உருவாகும் உள்ளம் என்னும் பொருள்படும் "The Emerging Mind" என்னும் புத்தகத்தைப் படிக்குமாறு பரிந்துரைத்தார். ”அமெரிக்க புரட்சியின்போது பெனிசிலின் கண்டுபிடிக்கப்படவில்லை. சண்டையில் கை, கால்களை இழந்தவர்கள் தங்களுக்கு கை, கால் வலிப்பதும், அரிப்பதுமாக உணர்வதை மனக்குழப்பமா மனநோயா என அவதிப்பட்டார்கள்” அதைக்குறித்த மன ஓட்டங்களைக் குறித்த விஷயங்களை விளக்கும் புத்தகத்தை எழுதியவர் வில்லியனூர் ராமச்சந்திரன். அவருக்கு ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு பரிந்துரைக்கப்படுகிறது” என்றார் பெருமிதத்துடன்.
குக்கிங் டீம் பற்றி கேட்டதும் எல்லோரும் புகழ்ந்தார்கள். இமான் அண்ணாச்சி அந்த பூண்டுக்குழம்பை வர்ணித்தபோது நமக்கே வாயில் ஜலம். அபிஷேக் ரிவ்யூவைக் கேட்ட கமல்ஹாசனுக்கு பெரிய விளக்கவுரை கொடுத்தார் அபிஷேக். இசைவாணி செஃல்ப் மேட், பாவனி முள்ளிருக்கும் ரோஜா, அய்க்கி பெர்ரி ஒரு பார்பி டால், குழாயடிக்கும் போய்ட்டு, கொடியும் தூக்கக்கூடிய விண்டேஜ் கிராமத்துக்காரி தாமரை அக்கா, ராஜு பயங்கரமான ஸ்டோரி டெல்லர்- செம்ம எஃபெக்ட்டா கதை சொல்றாரு, இமான் ஒரு பலாப்பழம், சுருதி மூணாவது விசிலுக்காக துடிக்கிறா, டைம் வந்தா Rock the world டைப் பொண்ணு, நிரூப் செம்ம மென்மையானவன் - நிரூப் மேல எனக்கு காதல், அக்ஷரா பழைய ஹீரோயின் விநோதினி மாதிரி இருக்காங்க, அபினய் ரொம்ப எளிமையா இருக்காரு. இன்னைக்கு நாள் புதுநாள்னு வாழ்றாரு, பிரியங்கா என்னோட அக்கா மாதிரி. என் அக்காதான் என்னை வளர்த்தா. தாய்ப்பால் கொடுக்காத அம்மா அவ. அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னைப் பிரிஞ்சு போனதை என்னால தாங்க முடியல. அவளுடைய இடத்துலதான் ப்ரியங்கா இருக்கா என எமோஷனல் ஆனாரு.. (பி.ஜி.எம் உன் கூடவே பொறக்கணும்.. உன் கூடவே பொறக்கணும்னு போயிட்டே இருந்தது)
வழக்கம்போல நாரதர் வேலையை செய்தார் பிக்பாஸ். லைக், டிஸ்லைக் டாஸ்க் வைக்கப்பட்டது. முதல் போனி ராஜு பாய்தான். டிஸ்லைக் நிரூப்புக்கு (குழந்தை மாதிரி இருக்குறதால நிரூப்பை பிடிக்கலையாம். என்னென்ன சொல்றார் பாருங்க.. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றார்), லைக் அண்ணாச்சிக்கு.
இரண்டாவதாக இசைவாணி வந்தார். நன்றாக பேசிப் பழகுவதால் அபிஷேக்குக்கு லைக். சரியாக இன்னும் பழகாமல் இருப்பதால் அக்ஷராவுக்கு டிஸ்லைக் கொடுத்தாங்க.
சின்னப்பொண்ணு அக்காவுக்கு ப்ரியங்காதான் ஃபேவரைட். அதனால் ப்ரியங்காவுக்கு லைக். அண்ணாச்சிக்கு டிஸ்லைக் கொடுத்தாங்க.
ப்ரியங்கா நிரூப்புக்கு லைக்கும், ஒன்னுமே பேசமா இருக்குற நடியா சாங்குக்கு டிஸ்லைக் கொடுத்தாங்க.
ப்ரியங்காவுக்கு லைக்கும், சிபிக்கு டிஸ்லைக்கும் கொடுத்தார் அபினய்
நிரூப்புக்கு லைக் கொடுத்தார் அக்ஷரா. நாடியா சாங்குக்கு டிஸ்லைக் கொடுத்தார்.
மதுமிதா நடியா சாங்குக்கு லைக்கும், தாமரைச்செல்விக்கு டிஸ்லைக் கொடுத்தார்.
நிரூப் ப்ரியங்காவுக்கு லைக்கும், நாடியா சாங்குக்கு டிஸ்லைக்கும் கொடுத்தார்.
மதுமிதாவுக்கு லைக் கொடுத்த நடியா சாங், அக்ஷராவுக்கு டிஸ்லைக்கை குத்தினார். அக்ஷராவுக்கு கொஞ்சம் ஆட்டிட்யூட் இருப்பதாகவும் சொன்னார் (அக்ஷராவை ஏன் ரவுண்ட் கட்டுறாங்கன்னு தெரியலையே)
சுருதி ராஜு பாய்க்கு லைக்கைப் போட்டு, டிஸ்லைக்கை அக்ஷராவுக்கே போட்டுவிட்டார்.
சிபி அபினய்க்கு லைக்கும், அண்ணாச்சிக்கு டிஸ்லைக்கையும் போட்டார். (எப்போ பாத்தாலும் 7 நாள்ல பாரு, 10 நாள்ல பாருன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. அது எனக்குப் புரியல)
வருண் ராஜுவுக்கு லைக்கை கொடுத்துவிட்டு, தாமரை அக்காவுக்கு டிஸ்லைக்கை போட்டார். (தாமரை அப்பாவியா இல்லையான்னு அவருக்கு இன்னும் தெரியலையாம்ப்பா)
அபிஷேக் லைக் கொடுத்தது பவனிக்கு, டிஸ்லைக் தாமரைச்செல்விக்கு. பவனி லைக் போட்டது இமானுக்கு, டிஸ்லைக் போட்டது அபினய்க்கு.. ஐய்க்கி மதுவுக்கு லைக், ப்ரியங்காவுக்கு டிஸ்லைக்.
தாமரைச்செல்வி அழுகையோடே வந்தார். இமானுக்கு லைக் போட்டுவிட்டு, அக்ஷராவுக்கு டிஸ்லைக்கை கொடுத்துவிட்டார்.
சுறுசுறுப்பாக ஐய்க்கியை லைக் போட்டுவிட்டு, ப்ரியங்காவுக்கு டிஸ்லைக் போட்டுவிட்டார் இமான்.
சின்னப்பொண்ணு, இசைவாணி, வருண் மூன்று பேருக்கும் எதுவுமே கிடைக்கவில்லை. பலரும் தனக்கு டிஸ்லைக் போட்டுவிட்டதால், யாராச்சு பேசுனாதான நான் பேசமுடியும்னு காட்ட முடியாத கோபமெல்லாம் அழுகையாக மாறியது அக்ஷராவுக்கு. இமான் சின்னப்பொண்ணுவை சமாதானப்படுத்தினார். ப்ரியங்காவைக் கொண்டாடினார்.
ஒட்டுமொத்தமா பாத்தா, சிண்டு முடிய ஸ்டார்ட் பண்ணிட்டாரு பிக்பாஸ்