Bigg Boss 5 Tamil Day 5 Promo 2: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தங்கள் சுய வாழ்க்கை துயரங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து, நேற்று தனது வாழ்கையில் நடந்தவற்றை கூறி பலரின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்றார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்த இரண்டாவது ப்ரொமோ சற்று முன் வெளியானது. அதில் குழந்தை வளர்ப்பு தொடர்பாக நமிதா கூறிய கருத்திற்கு, சக போட்டியாளரான நாடக நடிகை தாமரைச் செல்வி ஏதோ விமர்சனம் செய்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நமிதா, அவருக்கு நேருக்கு நேராக ‛நாளைக்கு வீட்ல பெரிய சண்டை இருக்கு... நான் இத விடமாட்டேன்... விடவே மாட்டேன்...’ என ஆர்ப்பரிக்கிறார். சண்டை முற்றியதாக தெரிகிறது. தாமரைச் செல்வியை அழைத்து இமான் அண்ணாச்சி விபரங்களை கேட்கிறார். ‛நீ பேசும் ஸ்லாங்... அவர்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்... அதனால் தவறாக நினைத்திருக்கலாம்...’ என அண்ணாச்சி கூற, ‛ஆமாம்ணே...’ என தாமரைச் செல்வி அப்பாவியாய் கூற, ‛சரி.. பேசி சமாதானம் செய்யவா...’ என்று அண்ணாட்சி கேட்கிறார். ‛நான் அப்பவே மன்னிப்புகேட்டுட்டேண்ணே...’ என தாமரைச் செல்வி கூற, அப்போது தற்செயலாக அங்கு வரும் நமீதாவை, ‛இங்கே வாம்மா...’ என அண்ணாச்சி அழைக்கிறார். ‛நான் அங்கே வரமாட்டேன் பெரியப்பா...’ என நமீதா கூற... அடுத்தது என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் முடிகிறது அந்த ப்ரொமோ.
இதோ தாமரைச்செல்வி-நமீதா இடையேயான அந்த ப்ரொமோ சண்டை...
மேலும் இன்றைய முக்கியச் செய்திகளுக்கு...