விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களின் வாழ்வில் நடந்தவற்றை கூறும் டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் மோசமான அனுபவங்களை பகிர்ந்த வருகின்றனர். அதன் மூன்றாவது எபிசோட் தொடர்ச்சியாக இன்றும் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் ப்ரொமோ சற்று முன் வெளியானது.
இந்த சீசனில் அதிக ரசிகர்களை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் சின்னத்திரை நடிகை பவனி, தன்னுடைய கணவர் இறந்ததால் தான் சந்தித்த அனுபவங்களையும், பிரிவையும் பகிர்ந்தார். பொதுவாகவே அவரது தமிழ் பேச்சு கொஞ்சும் தமிழில் இருக்கும். இன்று நா தழுவ... தனது கொஞ்சும் மொழியில் அவர் தன் துயரங்களை மெதுவாய் பகிர்ந்த போது, போட்டியாளர்கள் பலரும் கலங்கினர். பார்வையாளர்களும் தான். அப்படி என்ன பேசினார் பவனி... இதோ உங்களுக்காக அவர் பேசியவை...
‛‛ அவர் இறந்த போது எனக்கு அழகை வரல.. கோபம் தான் வந்துச்சு... அவ்வளவு கனவு இருந்துச்சு... அவ்வளவு கஷ்டப்பட்டோம்... இப்படி நடுவுல விட்டுட்டு போய்ட... ரொம்ப லவ் பண்ணிருக்கேன். ஒரு குழந்தை மாதிரி பாத்திருக்கேன். வாழ்க்கையில் தனியா இருக்கனும்னு என் தலையில் எழுதியிருக்கு போல...’’ என பவனி சிந்தி கண்ணீருடன் தன் நிலையை விளக்க, காணும் யாரும் கட்டாயம் கலங்குவார்கள்.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ...
இன்றைய நாளின் மிக முக்கியச் செய்திகள் இதோ...