Bigg Boss 5 Tamil Day 42 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ஆம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணுவை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவாணி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
அதனை அடுத்து, 42-வது நாளுக்கான கடைசி ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சிறப்பு எபிசோடில், இந்த வாரம் எலிமினேட் ஆவப்போவது யார் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில், அக்ஷரா, அண்ணாச்சி, சிபி, அபியய், மதுமிதா, பாவனி என ஆறு பேர் எலிமினேஷன் பட்டியலில் இருந்து கடைசியாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர். இதில், ஒவ்வொரு முறையும் எலிமினேஷனின் விளிம்பிற்கு வந்து செல்வது அபினய் என கமல் குறிப்பிடுகிறார். இந்த வார எலிமினேஷனில் அவர் இருக்கக்கூடும் என ஹிண்ட் தருகிறார் கமல். ஆனால், மதுமிதாதான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டிருக்கார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
ப்ரொமோ:2
ப்ரொமோ:1
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்