Bigg Boss 5 Tamil Day 39 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொன்னை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவானி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
அதனை அடுத்து, 39வது நாளுக்கான கடைசி ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. நேற்று ‘நானும் பொம்பை நீயும் பொம்பை தெரியும் உண்மை’ டாஸ்க் நடந்து முடிந்த நிலையில், இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் விருது நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவ்வப்போது வழக்கமான மோதல்கள் இருந்துவரும் நிலையில், நிரூப்பிற்கு எதிராக மற்ற போட்டியாளர்கள் குரல் எழுப்புகின்றனர். அப்போது ப்ரியங்காவும் கேள்வி கேட்க, இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது. ஐக்கி பெர்ரியும், நிரூப்பும் நல்ல நட்புகளாக பழகி வருவது பார்த்து ப்ரியங்கா, தனக்கு ‘பொஸஸீவ்வென்ஸ்’ வந்துவிட்டதாக பிக் பாஸிடம் புலம்புகிறார்.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
ப்ரொமோ:2
ப்ரொமோ:1
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்