Bigg Boss 5 Tamil Day 38: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொன்னை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக அபினய் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நாணயத்தை பயன்படுத்தி இசைவானி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். 


இந்த வாரம் இரண்டாவது நாளாக பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இந்த விளையாட்டால் வீட்டில் அதிகபடியான மோதல்களும், காரசார விவாதங்களும் நடைபெற்றது. அண்ணாச்சிக்கும் இசைவானிக்கும் மோதல் வெடித்தது போல, மற்ற போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் கடிந்து கொண்டனர். இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவராக எலிமினேட்டாகி கொண்டே இருந்தனர். இந்நிலையில், நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை 2.0 டாஸ்கில், பிக் பாஸ் போட்டியாளர்களில் யார் சுயபுத்தியோடு செயல்படுகிறார்கள், யார் கைப்பாவையாக இருக்கிறார்கள் என ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். அப்போது நிரூப்பிற்கும், அபினய்க்கும் வாக் தகராறு ஏற்பட்டு வீடே களேபரமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இது போன்ற வாய் தகராறு அதிகரித்து வருவது முகம் சுளிக்க வைக்கின்றது.


ப்ரொமோ:3





















ப்ரொமோ:2





















ப்ரொமோ:1



















































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண