Bigg Boss 5 Tamil Day 36: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக், சின்னப்பொன்னை அடுத்து நான்காவதாக ஸ்ருதி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று, இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுப்பது, நாமினேஷன் என வழக்கமான முதல் நாள் பரபரப்பு சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டில் அரங்கேறியது.


அதனை அடுத்து, 36வது நாளான இன்று, இந்த வாரத்திற்கான நாமினேஷனை பதிவு செய்யும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் ராஜூவை நாமினேட் செய்தனர். ப்ரியங்கா, அபினய், பாவனி, நிரூப் ஆகியோர் ராஜூவை நாமினேட் செய்கின்றனர். இத்தனை வாரம் பிக் பாஸ் வீட்டிலும், வெளியிலும் அனைவரது ஃபேவரைட் போட்டியாளராக வலம் வந்த ராஜூவும் இந்த வார நாமினேஷன் வலையில் சிக்கியிருப்பது போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. இதனால், இந்த வார நாமினேஷனில் ராஜூ, அக்‌ஷரா அபினய், மது, பாவனி, இமான் அண்ணாச்சி, சிபி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.


அதுமட்டுமின்றி, இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில், ‘பொம்மலாட்டம்’ டாஸ்க் நடைபெற்றது. இதில், கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் முகம் கொண்ட பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதில், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டாம் என நினைப்பவர்களின் பொம்மைகளை உடைக்க வேண்டும். இந்த டாஸ்க்கில், அபினவ்வின் பொம்மை உடைக்கப்படாமல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், நாணயம் வைத்திருப்பவருக்கு தலைவராகும் ஆற்றல் அளிக்கப்பட்டுள்ளதால், அந்த பவரைப் பயன்படுத்தி இசைவானி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனால், இந்த வாரம் முதல் எபிசோட் எதிர்ப்பாராத சம்பவங்களோடு நிறைவு பெற்றுள்ளது.


ப்ரொமோ:3


















ப்ரொமோ:2


















ப்ரொமோ:1
















































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண