Bigg Boss 5 Tamil Day 24 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 24-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, சின்னப்பொன்னா, ஐக்கி பெரியா என்ற நிலையில் இருந்தபோது அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் நாடியாவை அடுத்து இரண்டாவது எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீட்டில், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் பதிவு செய்தனர்.


அதனை அடுத்து, 24வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. தாமரைச் செல்வியின் நாணயத்தை ஸ்ருதியும், பாவனியும் திட்டமிட்டு எடுத்தவிட்டதால் ஏற்பட்ட மோதல் மூன்றாவது நாளாக இன்று தொடரும் என தெரிகிறது. நேற்று எபிசோடில் நடந்ததை மீண்டும் அசைப்போட்டு பார்க்கும் பாவனியும், ஸ்ருதியும் பிக் பாஸிடம் உதவி கேட்கின்றனர். இடையில் ராஜூ பேசியதை சுட்டிக்காட்டினார் பாவனி. “நாங்க காயின் எடுத்து கொடுத்தோம் தாமரைக்கு. அந்த காயினை கொடு. இது காயின் எடுக்கிற கேம் கிடையாது, மக்கள் நம்மள எப்படி பார்க்கிறாங்கறதுதான் கேம்” என ராஜூ பேசியதை நினைவு கூர்ந்து கடுப்பாகிறார் ஸ்ருதி.


அதற்கு பாவனி, “இங்க நல்லவங்களா இருக்கிறதுக்கு வேலையே இல்லை, இது ஒரு விளையாட்டு” என சொல்லி முடிக்கிறார். சென்ற வாரம் ஆரம்பமான இந்த காயின் விளையாட்டு இரண்டாவது வாரமாக தொடர்ந்து வருகிறது. இதனால் பல மோதல்கள், சண்டைகள், வாக்குவாதங்கள்  வந்து போனதை தவிர பிக் பாஸ் இன்னும் எதிர்ப்பார்க்கிறார் போல! இன்றைய எபிசோடில் பார்ப்போம்!


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..





















மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண