Bigg Boss 5 Tamil Day 23 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 24-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, சின்னப்பொன்னா, ஐக்கி பெரியா என்ற நிலையில் இருந்தபோது அபிஷேக் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் நாடியாவை அடுத்து இரண்டாவது எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீட்டில், இந்த வாரத்திற்கான நாமினேஷனை போட்டியாளர்கள் நேற்று பதிவு செய்தனர்.


அதனை அடுத்து, 23வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. முன்னதாக, தாமரைச் செல்வி வைத்திருக்கும் நாணயத்தை ஸ்ருதி எடுத்துவிடுகிறார். அதை ஏற்றுக் கொள்ளாத தாமரைச் செல்வி, “நீ செஞ்சது துரோகம். ஐயோ கடவுளே என்னைய கொண்டுவந்து இப்படி விட்டிருக்காங்களே” என கண் கலங்கினார்.  ஆனால், ஸ்ருதியும், பாவனியும் விடுவதாக இல்லை. “இந்த மாதிரி பெரிய வார்த்தையெல்லாம் பேசதீங்க. நீங்க பேசுறது தப்பு” என மல்லுக்கட்டுகின்றனர்.


Also Read: விஸ்வாசம்-அண்ணாத்த: அச்சு மாறாத ஒரே ட்ரெய்லர்... இயக்குனர் சிவா சொன்ன விளக்கம் இது தான்!


அதனை அடுத்து வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரொமோவில், ”கேமுக்காக பாசத்தை இழப்பிங்களா? என்ன பிள்ளைங்க.. ச்சை.. உன் மேல பயங்கர கோவத்துல இருக்கேன்” என தொடர்ந்து தாமரைச் செல்வி அழுதுக்கொண்டே ஸ்ருதியிடம் பேசுகிறார். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமென ஸ்ருதி விளக்கம் தர, அதை தாமரைச் செல்வி கேட்பதாக இல்லை. இந்நிலையில், மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர்களை சுற்றி நின்று கொண்டு எதுவும் பேசாமல் மெளனமாக இருக்கின்றனர்.


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..


















மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண