Bigg Boss 5 Tamil Promo: ‛நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்...’ கொளுத்தி போடும் போட்டியாளர்கள்!

தேவையில்லாத கேள்விகளை கேட்டு தேவையான வம்பை வளர்த்துவிடுவதுதானே பிக் பாஸ் வழக்கம். இன்றைய எபிசோடில் கொளுத்தி போட்டிருப்பது பிக் பாஸ்தான்.

Continues below advertisement

Bigg Boss 5 Tamil Day 18 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் பல திருப்பங்களை கொண்டிருந்தது. அதோடு, சிபி, பாவனி, ராஜூ, இசை ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட, இந்த வாரத்திற்கான தலைவராக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Continues below advertisement

இந்நிலையில், 18வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. அதில், ரவுண்ட் டேபிளில் அமர்ந்திருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள், “இந்த பிக் பாஸ் வீட்டின் நெருப்பு போன்ற போட்டியாளர் யார்?” என்ற கேள்விக்கு ஒவ்வொருவராக பதிலளித்து வருகின்றனர். அப்போது இந்த வாரத்தின் கேப்டனாக இருக்கும் சிபி, “நான் வந்து என்ன நெருப்பா பாக்குறேன். யாரச்சு கைவுட்டு, கால்வுட்டு பாக்கனும்னு நினைச்சாங்கனா சுட்டிருவேன்” என பேச ஆரம்பிக்கிறார். 

அடுத்து பேசிய தாமரைச் செல்வி, “யார குறை சொல்றதுனு தெரியல. ஆனா, அண்ணாச்சிய நெருப்பா நினைக்கிறேன். ஏன்னா, நல்லா காமெடி பண்ணுவாங்க ஆனா எப்ப குணம் மாறுதுனு தெரியாது” என சொல்லி முடிக்கிறார். 

அடுத்து பேசிய இம்மான் அண்ணாச்சி, “எனக்குள்ள குறை இருக்கு, ஆனா அபிஷேக் அவர்கள் வந்து கொளுத்தி போடுற நெருப்பாக இருப்பாரோ என்ற சின்ன சந்தேகம் எனக்கு” என அபிஷேக்கை கைகாட்டுகிறார். அப்போது குறிக்கிடும் சிபி, “நீங்க எனக்கு அபிஷேக்கை பத்தி சொன்னது தவறாப்படுது” என கவுண்டர் தருகிறார். 

தேவையில்லாத கேள்விகளை கேட்டு தேவையான வம்பை வளர்த்துவிடுவதுதானே பிக் பாஸ் வழக்கம். இன்றைய எபிசோடில் கொளுத்தி போட்டிருப்பது பிக் பாஸ்தான். முதல் ப்ரொமோவிலேயே வெடிக்க ஆரம்பித்துவிட்டார்கள், அடுத்து என்ன நடக்க உள்ளது என்பதை பார்ப்போம்.

இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola