Bigg Boss 5 Tamil Day 15 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனை இன்று பதிவு செய்ய உள்ளது.


இதனை அடுத்து, 15-வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. அதில், இசை, பாவனி, அக்‌ஷரா, சின்னப்பொன்னு என இந்த நால்வரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்கிறார்கள். இந்த நாளின் முதல் ப்ரொமோதான் இது என்பதால், இன்னும் நிறைய போட்டியாளர்களின் பெயர்களும் நாமினேஷனில் இடம் பெறும் என தெரிகிறது.


அபிஷேக், ப்ரியங்கா, ராஜூ ஆகியோர் சின்னப்பொன்னுவை நாமினேட் செய்கின்றனர். அக்‌ஷரா பாவனியையும், பாவனி அக்‌ஷராவையும் நாமினேட் செய்து கொள்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இதுதான் இரண்டாவது நாமினேஷன் என்பதால், கடந்த முறை நாமினேட் ஆகாமல் விடுப்பட்ட பாவனியும் இம்முறை பட்டியலில் சேர்ந்துள்ளார். இந்த வார எபிசோட் நாமினேஷன்களுடன் விறுவிறுப்பாகும் என தெரிகிறது. 


Biggboss Tamil 5 | எல்லோருக்கும் ஜோசியம் வாசிக்கும் அபிஷேக்.. வெளியேறிய நாடியா சங்


இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...






ப்ரொமோ: 2






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண