வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். ராஜு மோகனிடம் போய் உன்ன பிடிக்கும், உன்ன பிடிக்கும் ஆனா நீ நாடகம் முடிஞ்சு டிஃபண்ட் பண்ணி பேசல, சின்னபொண்ணு அம்மாகிட்ட கெட்ட பேரு வந்துடுச்சு என்றார் அபிஷேக். அபிஷேக் பேசியது ராஜுவுக்கும் புரியவில்லை. நமக்கும் புரியவில்லை.
எபிசோட் தொடங்குவதற்கு முன்பாக அபிஷேக் இசைவாணியைப் பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தார். இசைவாணி இன்செக்யூரிட்டிக்கு யாரும் எதுவும்செய்யமுடியாது என்றார். ப்ரிட்ஜில் இருந்து முட்டையை எடுன்னு சொன்னா, என் வீட்ல ஃப்ரிட்ஜ் இல்லன்னு சொல்றா இசைன்னு ப்ரியங்காவிடம் அடுக்கினார்.
எபிசோட் 15-இல் மறுபடியும் கதைகளையே எல்லாரும் பேச ஆரம்பித்தார்கள். யாருடைய கதை இன்ஸ்பையரிங்க்காக இருந்தது, எது அவ்வளவாக உணரப்படவில்லை என எல்லோரும் கருத்துக்களை தெரியப்படுத்தினார்கள். இமான் அண்ணாச்சிக்கு ராஜு பாயின் கதைதான் பிடித்திருந்தது. இமானுக்கு ஈர்ப்பு வராத கதை நாடியா சங்கின் கதை. பாவனிக்கு இசையின் கதைதான் உணர்வை எழுப்பியிருந்ததாக சொன்னார். வருணின் கதை ஈர்க்கவில்லை என்றார். தாமரைக்கு நமீதாவின் கதைதான் புரிந்திருக்கிறது. அதுதான் உணரப்பட்டும் இருக்கிறது. நாடியாவுக்கு ஈர்த்த கதை நமீதாவின் கதை. ஏனெனில் நாடியாவின் உடன் பிறந்தவரும் திருநராக இருந்திருப்பதால் அது புரிந்தது என்றார்.
காணாமல் போனவர்கள், ஜொலித்தவர்கள் பட்டியலைப் பற்றி கமல் கேட்டதும், இமான் ஜொலித்தார் என்றும், ஜொலிக்காதவர் சின்னப்பொண்ணும், நாடியாவும்தான் என்றும் சொன்னார். நாங்க காணாம போகல என சின்னப்பொண்ணும், நாடியாவும் சொன்னார்கள். இடையே புத்தக அறிமுகத்தில், வானமாமலையின், தமிழர் நாட்டுப்பாடல்கள் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார் கமல்.
சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல்.
ப்ரோமோ 3 :