பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுமே மக்கள் மத்தியில் பிரபலம். இதில், கடந்த 5வது சீசன் பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில், பல சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறினாலும் பாவ்னி – அமீர் விவகாரம் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரசியத்தை கூட்டும் விதமாக இருந்தது.


இந்த நிலையில், பிக்பாஸ் 5 சீசன் மூலம் பிரபலமான நடிகை பாவ்னி சமீபத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அப்போது, அவர் தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கல்லூரி மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.




மேலும், இந்த கல்லூரி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்று தெரிவித்துக் கொண்டார் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தனக்கு வாக்களித்து காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார். மேலும், மகளிர் தினத்தில் தனது சிறப்பு உரையாக, பெண்கள் தினத்தை அனுசரிக்கும் விதமாக பெண்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகும் பெண்கள் தங்களது கணவரை எதிர்பார்க்காமல் தானாக தன்னைப் பார்ததுக்கொள்ள வேண்டும். பெண்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அறிவுரைகளை கூறினார்.


அப்போது, அவரிடம் கல்லூரி மாணவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அப்போது, சில மாணவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீரை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர்  அமீர் தனக்கு ஒரு நல்ல நண்பர். அதைத் தவிர்த்து வேறு ஒன்றுமில்லை என்றார். மேலும், தனக்கு தற்போது தனது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் என்றும் கூறினார்.




பிக்பாஸ் சீசன் 5-ல் பாதியில் உள்ளே வந்த அமீருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இதன்மூலம் அவர் கடைசி 5 போட்டியாளர்கள் வரை முன்னேறினார். நிகழ்ச்சியின் இடையில் பாவ்னியை அவர் காதலிப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியது. அமீரும், பாவ்னியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், பாவ்னி தனக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறியிருப்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அமீர் பாவ்னியை முத்தமிட்ட காட்சி பிக்பாசில் ஒளிபரப்பானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பாவ்னி வேறு மாப்பிள்ளை தனக்கு பார்த்துக்கொண்டிருப்பதாக கூறியதால் அமீரின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண