தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளிலே அதிகளவு ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக விளங்குவது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் கடந்த சீசனான 5வது சீசனில் பங்கேற்றவர்கள் பாவ்னி மற்றும் அமீர்.




இந்த நிகழ்ச்சியின் பாதியில் இருந்து பங்கேற்றவர் அமீர் என்றாலும் இவர் பங்கேற்ற பிறகு பாவ்னி மற்றும் அமீரின் செயல்பாடுகள் அவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இருவரும் காதலிக்கிறார்களா? என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? இல்லையா? என்று ஊர்ஜிதப்படுத்தவில்லை.






இந்த நிலையில், அமீரின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாவ்னி வெளியிட்ட பதிவு இருவரும் காதலிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. அமீரை அன்புடன் கட்டியணைத்து இருப்பது போன்று பாவ்னி வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு கீழே, “ பிறர் வாழ்வில் மகிழ்ச்சியை பரப்பவும், பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பவும் தெரிந்த உன்னைப் போன்ற ஒருவரைப் பெற்றிருப்பது உண்மையிலே பாக்கியம். நான் உன்னிடம் இருந்து பெறும் அன்பும் அக்கறையும் இந்த பூமியில் உனகு மகிழ்ச்சியைத் தரும்.  அனைத்தையும் நீ பெறுவாய் என்று நம்புகிறேன்.




உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடிக்கும் என்னுடைய நல்லது, கெட்டதை நேசித்ததற்கு நன்றி. தங்கமான இதயம் கொண்ட ஒரு மனிதன். நானும் பல விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். லவ் யூ டா. பிறந்தநாள் வாழ்த்துக்கள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


இணையத்தில் தற்போது பாவ்னியின் பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு மூலம் அமீரை காதலிப்பதை பாவ்னி இந்த பதிவு மூலம் உறுதி செய்திருப்பதால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண