லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக இளைய தளபதி விஜய் கூட்டணி சேரும் திரைப்படம் என்பதால் படம் குறித்து அறிவிப்பு வெளியான நாள் முதல் தாறுமாறான எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜின் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சின் கீழ் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 67வது திரைப்படமாகும்.  


செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியன் படமாக வெளியானது. 


 



பாக்ஸ் ஆபிஸ் வசூல் :


கடந்த அக்டோபர் மாதம் ஆயுத பூஜை முன்னிட்டு அக்டோபர் 19ம் திரையரங்குகளில் வெளியான 'லியோ' திரைப்படத்துக்கு முதல் நாளே நல்ல ஒப்பனிங் கிடைத்தது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் 500 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றது. 


முதல் நாள் ஓப்பனிங் :


விஜய், த்ரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டின் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்திருந்த இப்படம் முதல் நாளே 148 கோடி வரை வசூல் செய்து பிரமிக்க வைத்து.


விஜய் ரசிகர்கள் கொண்டாடிய 'லியோ' திரைப்படம் தீபாவளி ரிலீஸ் படங்களாக வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் படங்களால் சற்று குறைக்கப்பட்டன. ஜப்பான் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பதால் அதற்கு ஒதுக்கப்பட்ட காட்சிகளில் லியோ படம் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 


தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லேட்டஸ்டாக புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 


ஓடிடியில் லியோ :  


அதாவது வரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் 'லியோ' திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாக தயாராகி விட்டதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படத்தில் வெளியாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. Leo on Netflix என்ற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஓடிடி ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.  


படம் திரையரங்குகளில் வெளியான நான்கே வாரத்தில் ஓடிடி ஸ்ட்ரீமிங் செய்யப்பட தயாராகிவிட்டது. இருப்பினும் லியோ படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவலும் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியாகவில்லை.