பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் முதல் முறையாக ஹவுஸ்மேட்ஸ் மற்ற ஹவுஸ்மேட்ஸுக்காக விளையாடினார்கள். இதில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோற்க வேண்டும் என போட்டியாளர்களே முடிவு செய்து கொள்வதாக இருந்தது. சக போட்டியாளர்களை ஓட விடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டார் நிரூப். தடுக்கலாம் ஆனால் ஓட விடாமல் பிடித்துக்கொள்வது தவறு என எதிர்ப்பு எழுந்தது. வருணையும் அக்ஷராவையும் விளையாட விடாமல் பிடித்துக் கொண்டார் நிரூப். இதனால் நீ இப்படி பிடிப்பது தவறு என அக்ஷரா நிரூப்பிடம் வாக்குவாதம் செய்தார்.


அப்போது சம்பந்தமே இல்லாமல் கூடாரத்திற்குள் வந்த சிபி, பால் கறக்கும் டாஸ்க்கின் போது சம்பவத்தை சுட்டிக்காட்டி நிரூப் செய்தது சரிதான் என அக்ஷராவிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினார் சிபி. இதனால் கடுப்பான அக்ஷரா, யாருக்கிட்ட என்ன பேசுற? என்ன வார்த்தை பேசுற? அறிவில்லையா என கேட்டு கத்தினார். பின்னர் இது போன்று யாரும் என்னிடம் பேச முடியாது என கத்தி ஆவேசப்பட்ட அக்ஷரா கூடாரத்தில் இருந்த கண்ணாடியிலும் அடித்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே டாஸ்க்கில் இருந்து வெளியேறிய சிபி, தேவையே இல்லாமல் அக்ஷரா பிரச்சனையில் தலையிட்டார். தேவையில்லாமல் வார்த்தையையும் விட்டார் சிபி.



இதனை பார்த்த ரசிகர்கள், சிபி மனதில் பழயணவற்றை வைத்து செயல்படுவதாகவும், பிக்பாஸின் நிகழ்ச்சி நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து போவதாகவும் விமர்சித்து வருகின்றனர். இத்தனைக்கும் சென்ற வாரம் தான் கமல் தரம் தாழ்ந்து பேச கூடாது என்று எச்சரித்து சென்றார். இதற்கு முன்னதாக நடந்த பால் கறக்கும் டாஸ்க்கின் போது பாவனிக்கும் தாமரை செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள கைகளை ஓங்கினர். தரம் தாழ்ந்த வார்த்தைகளையும் தடித்த வார்த்தைகளையும் பயன்படுத்தினர். இதனால் சமூக வலைதளங்களில் பாவனியையும் தாமரை செல்வியையும் நெட்டிசன்கள் விளாசினர்.


இந்நிலையில் அன்று அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்டுகளை சந்தித்த கமல் தாமரையிடமும் பாவனியிடமும் சண்டை குறித்து விசாரித்தார். அப்போது இருவரும் நடந்தது என்ன என தங்களின் தரப்பு நியாயத்தை கூறினர். எப்போதுமே தன்னை பட்டு பட்டென்று பேசுகிறார் என பாவனி மீது தாமரை குற்றம் சாட்டினார். பாவனியும் தாமரை உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு தன்னிடம் கோப்படுவதாக கூறினார். இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டதோடு கமல் முன்பே வாக்குவாதம் செய்து கொண்டனர். கமல் தடுக்க முயன்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சண்டை போட்டுக் கொண்டனர். அவர்களின் அந்த நடத்தையால் கமலே கடுப்பானார்.



பின்னர் இருவரும் கைகளை ஓங்கிக்கொண்டது குறித்தும் பேசினார் கமல். நீங்கள் கைகளை ஓங்கியதை பார்த்ததும் ஒன்னு விட்ட சகோதரிகளாக ஆகிவிடுவீர்களோ என்று தோன்றியது என்றார். மேலும் பட்டு பட்டுன்னு பேசாமல் படாமல் பேசுங்கள் என்றும் சூடுபோட்டார். மேலும் தரத்தையும் கண்ணியத்தையும் குறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று இருவருக்கும் அட்வைஸ் செய்த கமல், தாமரையிடம் உங்கள் மகன் பார்க்கிறார், அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற கமல் நீங்கள் கோபப்படுவதை பார்த்தால் உங்கள் மகன் அம்மா என்ன இப்படி கோபப்படுகிறார் என்று கூறப்போகிறார் என்றார். இதையெல்லாம் கேட்ட தாமரை இனிமேல் பழகி கொள்கிறேன் என்றார். ஆனால் கமல் இடைவெளியில் சென்றதும் கார்டன் ஏரியாவில் அக்ஷாராவிடம் பேசிக் கொண்டிருந்த தாமரை செல்வி, பாவனி தன்னை பிடிக்கும் என்று கூறியதை விமர்சித்தார். மொசப்புடிக்கிற நாயை மூஞ்ச பார்த்தால் தெரியாதா என்று கேட்டும் வார்த்தையை விட்டார் தாமரை.


கமல் எச்சரித்தும் மீண்டும் அதை விட கீழே இறங்கி கெட்டவார்தை பேசும் அளவுக்கு இறங்கியிருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்களும் சமூக வலைதளங்களில் குடும்பங்கள் காணும் நிகழ்ச்சி இப்படி பொறுப்பற்று இருக்கிறது என்று சாடி வருகின்றனர். பிக்பாஸ் டீம் நினைத்திருந்தால் அதனை எடிட் செய்திருக்கலாம் என்றும், டிஆர்பி-க்காக அதனை காட்டுகின்றனர் என்றும் விமர்சித்தது மட்டுமின்றி, அடுத்த வாரம் கமலே வந்து குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி என்று கருத்து சொல்வார் என்றும் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தங்களது டிஆர்பி-க்காக தமிழ் சமூகத்தை கெடுக்கிறது விஜய் டிவி என்று தொலைகாட்சியையும் திட்டு தீர்கின்றனர்.