சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடர்ந்து எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

Continues below advertisement


பிக்பாஸ் தமிழ் சீசன் 9


சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். நடுவில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சிலம்பரசன் டிஆர் ஆகியோரும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். இப்படியான நிலையில் முந்தைய சீசன்களை விட இப்போது ஒளிபரப்பாகி வரும் 9வது சீசன் பெரும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. 


இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அறிமுகமானபோதே மிகப்பெரிய பிரச்னை வெடித்தது. காரணம் முந்தைய சீசன்களில் சினிமா மற்றும் சீரியல் பிரபலங்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறார்கள் என்பதற்காக போட்டியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என ரசிகர்கள் குற்றம் சாட்டும் அளவுக்கு சென்றது. 


சோதிக்கும் போட்டியாளர்கள்


இந்த சீசனில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், கெமி, கனி திரு, அரோரா, ரம்யா ஜோ, சபரி நாதன், எஃப் ஜே, அகோரி கலையரசன், விஜே பார்வதி, வியானா, சுபிக்‌ஷா, இயக்குநர் பிரவீன் காந்தி, துஷார், ஆதிரை, கானா வினோத், பிரவீன், திருநங்கை அப்சரா, நந்தினி, கம்ருதீன், விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேசமயம் வைல்ட் கார்ட் எண்ட்ரீ மூலம் பிரஜின், அவரின் மனைவி சாண்ட்ரா, நடிகை திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோரும் உள்ளே சென்றனர். 


இவர்களில் நந்தினி தானாக வெளியேறினார். தொடர்ந்து பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, பிரவீன், கலையரசன், துஷார், திவாகர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் கெமி வெளியேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை போட்டியாளர்கள் விதிமுறைகளை மதிக்காமல் நடப்பதால் தொடர்ந்து இரண்டு வாரமாக நடிகர் விஜய் சேதுபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அனைத்து போட்டியாளர்களையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். இதில் நவம்பர் 22ம் தேதி எபிசோடில் பிரஜின், அவரிடன் வாக்குவாதம் செய்யும் வகையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதனால் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்மறை எண்ணம் மக்களிடத்தில் ஏற்பட தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு வார இறுதியில் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல நினைத்தாலும் போட்டியாளர்கள் சிலர் கேட்பதாக இல்லை. இதனால் அவர் அடுத்த சீசனில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கெட்ட வார்த்தை, ஆபாச செய்கைகள், கொலை மிரட்டல் என போட்டியாளர்கள் வாக்குவாதம் இடையே தங்கள் எல்லை மீறுவதால் நிகழ்ச்சியை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.