பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் இந்த வாரம் அடுத்தடுத்து இரு போட்டியாளர்கள் எவிக்‌ஷனில் வெளியேறியுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. முன்னதாக கனி திரு வெளியானதாக தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

Continues below advertisement


வெளியேறிய கனி 


பிக்பாஸில் இருந்து வெளியேறிய வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்


பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசனின் இந்த வார எவிக்‌ஷனில் முன்னதாக கனி திரு வெறியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வெளியேறியுள்ளார். பிக்பாஸின் இந்த சீசனில் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். தன்னை நடிப்பு அரக்கன் என காமெடி செய்து பார்வையாளர்களையும் போட்டியாளர்களையும் மகிழ்வித்தார். அதே நேரத்தில் பெண்களுடன் வாட்டர்மெலன் ஸ்டார் பழகும் விதம் தொடர்ச்சியாக விமர்சனத்திற்குள்ளானது. 



இன்ஸ்டாகிராமில் பட காட்சிகளில் நடித்து வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் வாட்டர்மெலன்ஸ் ஸ்டார். கஜினி படத்தில் வாட்டர்மெலன்ஸ் சீனில் இவர் நடித்து வெளியிட்ட ரீல்ஸ் வைரலானதால் தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என மாற்றிக்கொண்டார். பிற நடிகர்களை தன்னுடன் ஒப்பிட்டு தன்னை உயர்த்தி பேசுவது , சுய சாதி பெருமை பேசுவது என யூடியூபில் இவர் பேசிய வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இப்படியான சூழலில் தான் பிக்பாஸில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். 


வெளியே மட்டுமில்லாமல் உள்ளே சென்றும் தனது நடிப்பு திறமையை காட்டுகிறேன் என பாடாய் படுத்தினார். ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் நகைச்சுவை செய்து  நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார்கள். அந்த வகையில் பிடிக்கிறதோ இல்லையோ இந்த சீசனில்  நகைச்சுவைக்கு ஒரே ஆறுதலாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருந்து வந்தார். குறிப்பாக விஜே பார்வதி மற்றும் கானா வினோத் உடன் இணைந்து திவாகர் செய்த சேட்டைகள் இன்ஸ்டாகிராமில் படு வைரலாகின. ஆனால் எல்லா பெண்களிடமும் வழிந்து பேசுவது , யாரையும் பேசவிடாமல் கத்துவது , கேமரா முன் சென்று நடித்து காட்டுவது என சகிக்க முடியாத பல செயல்பாடுகளில் ஈடுபட்டார். தற்போது அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி அவரது அட்ராசிட்டிகளுக்கு ஒரு முடிவு கட்டியுள்ளார் பிக்பாஸ்