பிக்பாஸ் ப்ரோமோக்கள் ரிலீஸாவது மட்டுமில்லாமல், தூங்கப்போவதற்கு முன்னால் நடக்கும் விஷயங்கள், அர்த்த ராத்தியில் நடக்கும் உரையாடல்கள் எல்லாம் Unseen ப்ரோமோக்களாக வருவதுதான் பிக்பாஸ் இலக்கணம். இன்றைக்கு அப்படி ஒரு அன்சீன் ப்ரோமோவில் நம்ம சினிமா பையன் வாண்டடாக வண்டியில் ஏறுகிறார். அதாவது என்னன்னா, சீசன் 5-இல் இருக்கிறவர்களுக்கு ஐக்யூ அதிகமாக இருப்பதால் ஆப்ப சாப்ப விஷயத்துக்குல்லாம் சண்ட வராது. நீ இன்னைக்கு கக்கூஸ் கழுவலையான்னு சண்டபோடமாட்டோம் என்றார் அபிஷேக். (ஒகே பாஸ்)
முன்னதாக இரண்டாம் ப்ரோமோவில்,
"கலைஞர்கள் யாரும் கஷ்டத்தைக் காட்டக்கூடாது. இது கஷ்டத்தைக் காட்டுற இடம்தான். ஆனா உங்க பாட்டுல இருக்குற லைஃப் உங்க கதையில எனக்குத் தெரியல” என்கிறார் ராஜு மோகன். இரண்டாவது ப்ரோமோவில். அவர் குறிப்பிட்டுப் பேசுவது சின்னபொண்ணுவைத்தான் எனத் தெளிவாக தெரிகிறது. நடந்துபோகும் சுவர் இருந்தாதான் அதை இடிச்சிட்டு போகணும்னு நினைப்போம். இப்போ நான்தான் அந்த சுவர். என்னை இடிச்சிட்டு, இன்னும் முன்னேறிப்போங்க என்றார். இது கோபமாகவும், ஆதங்கமாகவும் நிச்சயம் வெளிப்படும். வலியை வெளிய சொல்றதுக்கே தனியான தைரியம் வேணும் ப்ரோ..
முதல் ப்ரோமோவில் வந்த க்ளிப், சொந்த வாழ்க்கையில் இருந்து சில விஷயங்களைப் பகிர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பிக்பாஸ் டாஸ்க்காக இருக்கலாம் என தெரிகிறது. “அப்பாவுக்கு ஹார்பர்ல வேலை. திடீர்னு வேலையில்ல. என்ன பண்றது. காசு கொடுக்கமுடியாதே. வீட்டை விட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. ஒருவேளை சாப்பாடுதான் இருக்கும். அதையும் நான் சாப்பிடணும்னு அப்பா சாப்பிடமாட்டார்” என்றார் இசைவாணி எல்லாருடைய கண்களிலும் கண்ணீர்.
நேற்றைய எபிசோடில், வெள்ளந்தி தாமரைச்செல்வி வெப் சீரிஸ்னா என்ன என்கிறார். ஸ்வீட்டாக பதில் சொல்றாங்க க்யூட்டி பாவனி. மாஸ்டர் சிபி எப்படி டீ போடுவது என்கிறார். ஐய்க்கி யாரை மாதிரி இருக்காங்கன்னு கண்டுபுடிச்டேன்னு இசைவாணி சொன்னதும், ஜமீன் கோட்டையில ஒரு கிழவி வருவால்ல என்று கமெண்ட் சொன்னார் ராஜு. நானாச்சு ஷாகிராவை நினைச்சேன்னு இசைவாணி சொல்லும்போது, ஷாகிரா இல்லம்மா ஷகிரா என திருத்துகிறார் அபிஷேக். (எல்லாம் பாடி ஷேமிங் கேஸ்ல உள்ள போகப்போறது தெரியாம சிரிச்சுனு இருக்காங்க.. சிரிங்க சிரிங்க) நல்லவேளை அவ்வையார்னு சொல்லாம விட்டான்னு சைட் கமெண்ட் கொடுத்தார் அபிஷேக். இப்போதுவரை எங்கள் வீட்டில் எல்லா நாளும் புன்னகை.. லாலல்லாதான். இனிமேயும் லாலாவாகவே இருக்கவேண்டும். இருந்தால் பார்ப்பீர்களா மக்களே.. இப்போது வரை பிக்பாஸ் ஜன்னலில் நட்சத்திரம்தான் எட்டிப்பார்த்துக்கொண்டு லால்லா லால்லா சொல்லிக்கொண்டிருக்கிறது. நாளைக்கு பாக்கலாம் வெய்ட் கரோ.