2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.


இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்‌ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண், ஐக்கி பெர்ரி, இசை வாணி உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர்.


 




சீசன் முடிவடைந்த நிலையில், ஐக்கி பெர்ரியும் தாமரையும், முந்தைய சீசனில் பங்குபெற்ற சுரேஷ் தாத்தாவின் வீட்டுக்கு சென்று வர, பிஷேக், அபினய், மதுமிதா, சுருதி, வருண், அக்‌ஷரா, அமீர், பாவனி ஆகியோர் பார்ட்டிக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டனர்.


இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா... பிக்பாஸ் கலந்து கொண்டு பிறகு தனது யூடியூப் பக்கத்தில் முதல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் பல விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். 


அதில் அவர், “ பெரிய ரிஸ்க் எடுத்துதான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனேன். ஆனால் என் மைண்ட்ல  ஒண்ணே ஒண்ணுதான் இருந்துச்சு. அது எந்த சூழ்நிலையிலும் உங்கள ஏமாத்திடக்கூடாதுங்கிறது. எனக்கு நிறைய ஏமாற்றங்கள் நடந்துருக்கு.. ஆனா என்னோட வேலைதான் எனக்கு எப்போதும் சந்தோஷம் கொடுக்க கூடியதா இருந்துருக்குனு..” சொல்லிட்டு இருக்கும் போதே.. 




ராஜூக்கூட எப்ப வீடியோ போடுவீங்கனு ஒருவர் கேட்க  “அவன் எப்ப அவன் மனைவியை வீடியோல பார்த்தானோ அப்பவே அவன் கிளம்பி போயிட்டான். அவன் -ட நா பேசுனேன். சீக்கிரமா அவன் கூட சேர்ந்து வீடியோ போடுறேன்”  என்றார்.


இன்னொருவர் குக் வித் கோமாளி ஷோவை தொகுத்து வழங்குறீங்களானு கேட்க. “ இன்ட்ரஸ்டிங் ஐடியா.. எனக்கு மெசஜ் போட்ட மாதிரியே விஜய் டிவிக்கும் மெசஜ் போட்ருங்க” என்று கூறினார். 


தொடர்ந்த பிரியங்கா “என்னோட தம்பிதான் நான் உள்ள இருந்தப்ப என்னோட இன்ஸ்டாகிராமை ஹேண்டில் பண்ணிட்டு இருந்தான். அவன் என்ன பாராட்டினதுலாம் இல்ல. ஆனா இப்ப பாராட்டினான்” என்றார்




ரசிகர் ஒருவர் லவ் பத்தி கேட்க,  “ லவ் - ல நா எப்போதுமே தோத்துதான் போயிருக்கேன். ஏமாந்து போயிருக்கேன். ரொம்ப வலியோட இருந்துருக்கன். ஆனா செல்ஃப் லவ் இருக்குல. அதுதான் என்னோட  பலம்” என்றார்.


அப்போது தாமரை பற்றி ஒருவர் கேட்க, “அவ ஒரு கேடி தெரியாது தெரியாதுனு சொல்லிட்டு மாஸா ஒண்ணு பண்ணிட்டு போயிரும்” என்றார்..


தொடர்ந்து அபிஷேக் எப்படினு கேள்வி வர, ‘அவனு நிறைய மூளை.. நல்ல பையன்.. நல்லா வரணும்.” என்றார்