நடன இயக்குநர் காதலுக்கு நடிகை பாவ்னி சம்மதம் சொல்லியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியலின் மூலம் அறிமுகமான பாவ்னி, அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அவரது காதல் கணவரின் தற்கொலையால் மன அழுத்தத்தில் இருந்த பாவ்னி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார்.இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வந்த நடன இயக்குநர் அமீர்  ஆரம்பத்தில் இருந்தே பாவ்னியுடன் நெருங்கி பழகினார். பிக்பாஸின் போது பாவ்னிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது என இந்த ஜோடி பல சர்ச்சைகளில் சிக்கியது. 






பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒன்றாக பல இடங்களுக்கு இவர்கள் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனாலும் பாவனி அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளவேயில்லை. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில்  இருவரும் இணைந்து நடனமாடி வருகின்றனர். அமீர்- பாவ்னி காதல் நாளுக்கு நாள் வலுவாகி வரும் நிலையில் கல்யாணம் செய்தால் முதல் கணவருக்கு நிகழ்ந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் அமீருக்கும் நடந்து விடுமோ என நினைப்பதாக பாவ்னி  தெரிவித்தார்.  


ஆனாலும் அமீர் மட்டுமல்லாமல் ரசிகர்களும், விஜய் டிவி பிரபலங்களும், பாவ்னியின் குடும்பத்தினரும் அவரை அமீருக்கு ஓகே சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர்-பாவ்னி ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் இறுதியாக நாங்கள் வென்றோம். அனைவருக்கும் நன்றி.  உங்கள் ஊக்கம் இல்லாமல் என்னை இதில் பங்குபெற வைத்த உங்கள் அன்பை மறக்க முடியாது. நடனம் எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.






அதுவும் இதுபோன்ற ஒரு போட்டி நிகழ்ச்சியில் அடியெடுத்து வைப்பது இன்னும் பயங்கரமான விஷயம். நடனம் ஆடாத ஒருவரை நடனமாட வைக்கவும், அவளை வெற்றிபெறச் செய்யவும் தெரியும் என்பதன் மூலம் அமீர் நீங்கள் சிறந்த மாஸ்டர் என்று நிரூபித்து விட்டீர்கள். இது ஒரு அற்புதமான பயணம். இதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் விரும்புகிறேன். உன்னைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன். உன்னிடமிருந்து பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நீங்கள் ஒரு சிறந்த மாஸ்டர், சிறந்த துணை நடனக் கூட்டாளி, சிறந்த நண்பர். 


எனவே இப்போது நாம் ஒன்றாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோம். அமீர் என்றென்றும் நீ என்னுடையவனாக இருப்பாயா நான் உன்னை காதலிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஒருவழியா பொண்ணு ஓகே சொல்லிடுச்சி  என தெரிவித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.