பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன்முறையாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார், கமல் பரிந்துரைத்த புத்தகம் உள்ளிட்ட விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பநாட்களில் சுமூகமாக சென்று அதன் பின்னரான நாட்களில் சூடுபிடிக்க தொடங்கும். ஆனால் இந்த சீசனில் ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் அனல் பறந்தது. குறிப்பாக அண்மையில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில், கதை சொல்லும் டாஸ்க் மூலம் ஃப்ரீ சோனுக்கு 8 போட்டியாளர்கள் செல்ல, மீதமுள்ள போட்டியாளர்கள் மத்தியில் ரேங்கிங் டாஸ்க் ஆரம்பித்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அடுத்த வாரம் தலைவர் பதவி போட்டிக்கு நேரடியாக சென்று நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
தரக்குறைவாக பேசிய அசிம்
இந்த டாஸ்க்கில் அசிம் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து வார இறுதியில் நடந்த கமல் சந்திப்பில், அசலை தவிர்த்து பெரும்பான்மையான போட்டியாளர்கள் அசிமிற்கு ரெட்கார்டு கொடுக்க அனைவர் முன்னிலையிலும் மன்னிப்புக்கேட்ட அசிம், தனக்குத்தானே ரெட் கார்டு கொடுத்து கொண்டார். இதனிடையே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜி.பி. முத்து மகனுக்காக தான் வெளியே சென்றே ஆகவேண்டும் என்று அடம்பிக்க, கமல் அவரை வேறு வழியில்லாமல் வெளியே அனுப்பி வைத்தார்.
அதன்பின்னர் நேற்றைய தினம் எவிக்ஷன் ப்ராசஸ் நடந்த்து. இதில் நிவா, அசல் கோலார் என ஒவ்வொருவராக கமல் சேவ் செய்து வர, இறுதிக்கட்ட ப்ராசஸில், ஷிவின், சாந்தி மற்றும் மகேஷ்வரி இருந்தனர். இதில் ஷிவன் பாதுகாக்கப்படுகிறார் என்று கமல் சொல்ல, அவரும் சேவ் சோனுக்கு சென்றார். கடைசியில் சாந்தியும், மகேஷ்வரியும் இருந்தனர். யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட போகிறார் என்ற பரபரப்பு பற்றிக்கொள்ள, போர்டை காண்பித்து சாந்தி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இதனையடுத்து வெளியே வந்த சாந்தி, கமலிடம் இந்த கேமில் நான் என்னை மாதிரி இருந்தால், செட் ஆகாதோ? என்னவோ? என கேட்க, இடைமறித்த கமல் இதனை நீங்கள் உங்களை எடை போடும் விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகத்தான் இருந்தீர்கள். நீங்கள் இப்போது உள்ளே போன சாந்தி இல்லை. வெளியே போகிற சாந்தி, வெளியே போனால் நீங்கள் யார்? என்று தெரியும் என்றார். தொடர்ந்து நடந்த புத்தக பரிந்துரையில் நா. மம்மது எழுதிய ஆபிரகாம் பண்டிதர் புத்தகத்தை பரிந்துரைத்தார்.