Bigg Boss 7 Tamil Vichitra: ரசிகர்களிடம் லைவில் பேசிய நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பினாலேவில் பங்கேற்காததை நினைத்து வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 


 


விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. 

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா, மாயா, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் விஜய் வர்மா இருந்தனர். அவர்களில் விசித்ரா நேற்று வெளியேறினார். விசித்ரா பிக்பாஸ் டைட்டில் வின்னர் பைனலுக்கு செல்வார் என்று நினைத்த நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அவரது ஃபேன்பேஸ்க்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த விசித்ரா சமூக வலைதளங்களில் லைவில் பேசியுள்ளார். அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய விசித்ரா, “டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. டிக்கெட் டூ பினாலே டாஸ்குக்கு முன்னாடி ஸ்டோரி சொன்னாங்க. அதில் எனக்கு 3 சதவீத வாக்குகள் தான் இருந்தது. அதனால் எனக்கு 3 சதவீத மக்களின் ஆதரவு தான் இருந்ததா என்று தோன்றியது. ஆனாலும் சிலர் வைத்திருந்த நம்பிக்கையால் விளையாடினேன். 


 

பைனல் ரவுண்டில் நான் வின் பண்ணவில்லை என்று சிலர் கவலையடைந்தனர். என்னை சிலர் வாழ்த்தி இருக்கிறார்கள், என்னை அதிகமாக பிடித்தவர்கள் குடும்பப் பெண்களும், குழந்தைகளுமாக தான் அதிகம் இருந்துள்ளனர். இந்த 3 சதவீத மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் நான் பெஸ்ட் ஆக இருக்கணும்னு நினைத்தேன். மீடியாவில் எனக்கு அதிகமான வரவேற்பு இல்லை. 

 

இதனால் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பைனலில் டாப் 5-ல் வரவேண்டும் என்று நான் நினைத்து இருந்தேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது நான் ரொம்ப அப்செட் ஆகினேன். 100 சதவீதம் என்னால் மக்கள் நினைத்ததை செய்யவில்லை என்று வருந்தினேன். நிறைய பேர் நான் டென்ஷனாக இருந்ததற்கு வருத்தப்பட்டார்கள். அந்த நாள் அங்கே எல்லாமே தப்பு தப்பாக நடந்தது. அதிகமாக வெற்றி பெற்றது நான் தான். ஆனால் நான் எப்படி பினாலேவை விட்டேன் என்று நினைத்தால் இப்போது வரை வருத்தமாக உள்ளது” என பேசியுள்ளார்.