விஜய் டிவி ரியாலிட்டி ஷோவிற்கு பெயர் போனது. சின்னத்திரை ரசிகர்களின் மிகவும் பேவரட் சேனலாக விளங்கும் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களாக வெற்றி நடை போட்டு வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் சமீபத்தில் தான் முடிவடைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி அதிக அளவிலான ரசிகர்களை ஈர்க்க உலக நாயகனும் ஒரு காரணமாக இருந்து வருகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட் :
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இதுவரையில் அனைத்து சீசன்களிலும் விளையாடிய போட்டியாளர்களில் இருந்து சிறப்பாக கன்டென்ட் கொடுத்தவர்களாக தேர்ந்து எடுத்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். இடையில் உலகநாயகன் படப்பிடிப்பு காரணமாக பிஸியாக இருந்ததால் அந்த சமயத்தில் நடிகர் சிம்பு ஒரு சில நாட்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கனார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் விரும்ப என்ன காரணம் :
வெவ்வேறு மனநிலை கொண்ட போட்டியாளர்கள் ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் எப்படி தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சி. இதில் ஏராளமான சண்டைகள், கருத்துவேறுபாடுகள், மோதல்கள் ஏற்படும். ஒரு சில போட்டியாளர்கள் குரூப் அமைத்து கொண்டு விளையதிவது, நட்பு பாராட்டுவது, டாஸ்க் விளையாடுவது இப்படி பல ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிக் பாஸ் சீசன் 7 எப்போ:
மிகவும் பிரமாண்டமாக பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும் இன்று மிகவும் பிரபலமான செலிபிரிட்டியாக வலம் வருகிறார்கள். அதனால் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யார் வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதமே இந்த சீசன் துவங்கவும் வாய்ப்புகள் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மத்தியில் போட்டியாளர்கள் குறித்த அப்டேட்டுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட துவங்கவுள்ளது. விரைவில் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.