பாவனி, அமீர் இந்த ஜோடி தான் பிக்பாஸ் லேட்டஸ்ட் சீசனின் லேட்டஸ்ட் ஹாட் ஜோடி. சீசன் 1ல் ஓவியாவும் ஆரவும் ஏற்படுத்திய பரபரப்பை சீசன் 5ல் பாவனியும் அமீரும் ஏற்படுத்தினர்.  ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னராகவும், பிரியங்கா ரன்னராகவும் வெற்றி பெற்றனர்.  பாவ்னி மூன்றாவது இடத்தையும், அமீர் நான்காவது இடத்தையும் பிடித்தனர். அதேசமயம், பாவ்னிதான் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வருவார் எனவும் ஒருதரப்பின் எதிர்பார்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிக்பாஸ் சீசன் 5 முடிந்த பின்னரும் மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக பாவ்னி, அமீர் ஜோடியின் க்யூட்னஸ் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


அடுத்ததாக ஜோடிகள் 2:



பிக்பாஸ் முடிந்தாலும் பாவ்னி, அமீர் கூட்டணிக்கு இருக்கும் வரவேற்பால் விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் 2  நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்றுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது இவர்களுடன் சேர்ந்து போட்டியாளர்களாக , ஐக்கி பெர்ரி - தேவ், வேல்முருகன் - இசைவாணி, அபிஷேக் - ஸ்ருதி,  சுஜா - அவரது கணவர் சிவகுமார், ஆர்த்தி அவரது கணவர் கணேஷ், தாமரை அவரது கணவர் பார்த்தசாரதி மற்றும் டேனி ஆகியோர் இணைந்தனர். இந்த ஷோவிலும் ஸ்டீல் தி ஸ்டேஜ் மாதிரி பாவ்னி அமீர் மேஜிக் ஒர்க் அவுட் ஆகிறது.






காதலா காதலா?


பாவனிக்கு காதலை வெளியிடையாக எப்போது சொல்லிவிட்டார் அமீர். ஆனால் பாவனி இன்னும் அதை ஏற்றாரா இல்லையா என்பது நம்மில் யாருக்கும் தெரியவில்லை. 


இப்படித்தான் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனியிடம் அமீரை கல்யாணம் கட்டப் போறீங்களா எனக் கேட்க ராக்கி கட்டப்போறேன் என்று கூறி அமீரையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அப்புறம் கொஞ்சலாக, கெஞ்சலாக நான் ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட் கட்டுகிறேன் என்றார்.


ஒருவேளை அமீருக்கு மட்டும் சொல்லி ரகசிய சினேகிதனே எனக் கொண்டாடுகிறாரா என்றும் தெரியவில்லை. 


வைரல் வீடியோ:


இந்நிலையில் தான் ட்விட்டரில் பாவனி, அமீரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாவ்னி கையில் ஒரு துண்டு காகிதம் உள்ளது. அதில் அமீர் ஏதோ எழுதிக் கொடுத்திருக்கிறார். அதில் இருப்பதை பாவ்னி திரையில் காட்ட முற்படுகிறார். ஆனால் அதற்கு அமீர் இடையூறு செய்கிறார். இருவரும் செல்லச் சண்டை போட்டுக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் போலியாக அடித்து விளையாடுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் இருவரும் ப்ளாக் டி ஷர்ட்டில் சும்மா நச்சென்று இருக்கிறார்கள்.